சென்னை, ஏகாதிபத்திய எதிர்ப்பு களத்தில் போரிட்ட மாவீரர் பூலித்தேவனுக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம். சிப்பாய்க்கலகம் பூலித்தேவன் (1715–1767), தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், நெல்கட்டும்செவலை ஆண்ட தமிழ் பாளையக்காரர் ஆவார். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். விடுதலைப்போர் என கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாக கருதப்படுகிறார். பூலித்தேவன் பிறந்தநாள் இந்திய சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 311-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ் வணக்கத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- புகழ் வணக்கம் “சிப்பாய் புரட்சிக்கு நூறாண்டு முன்பே அந்நியர் ஆட்சிக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ் வீரர் பூலித்தேவர் பிறந்தநாள். தன்னலத்தை விடுத்து தமிழ்நிலத்தின் தன்மானமே பெரிதெனக் கருதி ஏகாதிபத்திய எதிர்ப்புக் களத்தில் போரிட்ட மாவீரர் பூலித்தேவருக்கு என் புகழ் வணக்கத்தை உரித்தாக்குகிறேன்! என்று தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-pays-tribute-to-anti-imperialist-hero-pulithevan




