பர்மிங்காம், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண் டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பர்மிங்காமில் நடந்த தொடக்க ஆட்டத் தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடை யிலான 2-வது ஒரு நாள் போட்டி கார்டிப்பில் உள்ள சோபியா கார்டன் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய ஆல்-ரவுண் டர் வாஷிங்டன் சுந்தர் 5-வது வரிசையில் களம் புகுந்து 52 ரன்கள் (63 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசி வெற்றிக்கு வித்திட்டார். இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த 26 வயதான வாஷிங்டன் சுந்தர் நிருபர்களிடம் கூறுகையில், 'பேட்டிங்கில் பல்வேறு வரிசையில் விளையாடுவது மகிழ்ச்சி அளிக் கிறது. இது போன்று வெவ்வேறு ரோலில் ஆடும் வாய்ப்பு நிறைய பேருக்கு கிடைப்பதில்லை. அணியின் வெற்றிக்கு உதவ எப்போதும் முழு முயற்சி மேற் கொள்கிறேன். ஆட்டத்தின் வெவ்வேறு கட்டங்களில், வித்தியாசமான சூழலில் ஆடுவது உற்சாகமாக உள்ளது.பேட்டிங்கில் என்னால் என்ன செய்ய முடியும் என்பதையும், எனது ஆட்டத்தை பற்றியும் பயிற்சியாளர் கம்பீர் எனக்கு புரிய வைத்தார். ஒரு ஆல்-ரவுண்டராக ஒவ்வொரு நாளும் எனது ஆட்டத்திறனை மேம்படுத்திக் கொள்வதும், எனது ஆட்டத்தை புரிந்து கொண்டு சூழலுக்கு தக்கபடி விளையாடுவதும் மிகவும் முக் கியம். நிறைய போட்டிகளில் ஆடும் போது கற்றுக்கொள்ள உதவிகரமாக இருக் கிறது. ஆல்-ரவுண்டராக இருப்பதை ஆசிர்வதிக்கப்பட்டதாக கருதுகிறேன். ஏனெ னில் எந்த ஒரு அணியும், பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கைகொடுக்கும் ஆல்-ரவுண்டர்களை விரும்புவார்கள்' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/i-always-put-in-my-best-effort-to-help-the-team-win-washington-sundar




