சென்னை, சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு தி.மு.க.வில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். முதியவர்களை விடுவித்து, இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. குறிப்பாக, அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இளைஞரணியை சேர்ந்தவர்களுக்கும் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 14 மாவட்டங்களில் குறிப்பாக, தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 75-ல் இருந்து 110 ஆக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க.வின் அமைப்பு ரீதியான மாவட்டங்கள் 110ஆக உயரும் நிலையில், எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த தொகுதிகள் இடம்பெறலாம் என்பது குறித்து கட்சியின் மறுசீரமைப்பு குழு தரப்பில் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை உட்பட 14 மாவட்டங்களில் மட்டும் 3 தொகுதிகளுக்கு அமைப்பு ரீதியாக மாவட்டம் என்று பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தீர்மானம் மாவட்டங்களின் எண்ணிக்கை 110ஆக உயர்த்தப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலமாக 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற நிலை உருவாகும் என்பதோடு, மாவட்டச் செயலாளர்களுக்கு வயது வரம்பு மற்றும் 3 முறை மட்டுமே பொறுப்பில் இருக்க முடியும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிதாக மாவட்டச் செயலாளர் பொறுப்பு இதற்கு தி.மு.க.வின் அடுத்த தலைமுறை தலைவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அதேபோல் சீனியர்களை ஒரே அடியாக ஓரம் கட்டாமல், அவர்களுக்கு மாநில அளவிலான பொறுப்புகளை கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க.வின் இந்த புதிய அறிவிப்பு காரணமாக 13 முன்னாள் அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பை இழக்கின்றனர். இதனால் மொத்தமாக தி.மு.க.வில் சுமார் 50 பேர் வரை புதிதாக மாவட்டச் செயலாளர் பொறுப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தி.மு.க.வில் அமைப்பு ரீதியான மாவட்டங்கள் 110ஆக பிரிக்கப்படும் சூழலில், இதுதொடர்பாக மறுசீரமைப்பு பரிந்துரை குழு நேற்று ஸ்டாலினிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது. சென்னை, திருச்சி, சேலம் அந்த அறிக்கையில் எந்தெந்த தொகுதிகள் எந்தெந்த மாவட்டங்களோடு சேர்க்கலாம் என்ற தகவல் இடம்பெற்றுள்ளன. அதன்படி 14 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் செயற்குழு தீர்மானங்களின் படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 2 தொகுதிகளாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, சேலம், விருதுநகர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை பிரிக்கும் போது தலா 3 தொகுதிகளுடன் மாவட்டம் உருவாக்கப்படுகிறது. 110 மாவட்டங்கள் எது அதேபோல் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் தலா 3 தொகுதிகளுடன் ஒரு அமைப்பு ரீதியான மாவட்டம் உருவாக்கப்படுகிறது. இந்த மாவட்டங்களின் அடிப்படையில் ஓரிரு நாட்களில் ஸ்டாலின் 110 மாவட்டங்கள் எது, எப்படி பிரிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே தேர்தல் மூலமாகவே தி.மு.க.வில் பதவிகள் நிரப்பப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதனால் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட உடன், அடுத்தக் கட்டமாக மாவட்டச் செயலாளர்கள் மற்ற கிளை நிர்வாகங்களை பிரித்து அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-gears-up-for-bold-moves-which-constituencies-in-which-districts-announcement-expected-in-two-days



