சென்னை, சென்னை தலைமைச் செயலகத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “அரசியலுக்காக நாங்கள் ஒருபோதும் ஆண்டவனை பயன்படுத்துவது இல்லை. நாங்கள் பக்தியை வைத்து பகை வளர்ப்பவர்கள் அல்ல, பக்தியை வைத்து இறை நம்பிக்கையை வளர்ப்பவர்கள். திருச்செந்தூர் முருகன் கோவிலை தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், 400 கோடி ரூபாய் செலவில் புனரமைத்துள்ளார். எல்லாம் வல்ல தமிழ்க்கடவுளான முருகனுக்கு 22 நாடுகள் பங்கேற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்திக் காட்டியவர். பழனி முருகன் கோவிலுக்கு பெருந்திட்ட வரைவு வாயிலாக குடமுழுக்கை நடத்தியது நாங்கள்தான். முதல் படை வீடான திருப்பரங்குன்றத்திலும் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில்தான் குடமுழுக்கை கண்டோம். மருதமலையிலும், சுவாமிமலையிலும் பக்தர்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு, மின்தூக்கியை நாங்கள்தான் கொண்டுவந்தோம். முருகப்பெருமானுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்குமேயானால், தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற பணிகளுக்காக, தி.மு.க.வுக்குத்தான் அவர் வாக்களித்திருப்பார். அந்த அளவிற்கு தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைக்கு பெருமை சேர்த்த ஆட்சி தி.மு.க. ஆட்சி.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/lord-murugan-himself-will-vote-for-the-dmk-mla-sekar-babu



