பெர்ன், ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு சுவிட்சர்லாந்து. இந்நாட்டின் ஆர்காவ் மாகாணம் சச்சன் பகுதியில் இன்று இரவு நேர இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். துப்பாக்கி சூடு - இளம்பெண் பலி இந்நிலையில், இசை நிகழ்ச்சி நடந்தபோது அங்கு வந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கி சூட்டில் 22 வயதான இளம்பெண் உயிரிழந்தார். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அதேவேளை, துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளம்பெண் இத்தாலி நாட்டை சேர்ந்தவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/switzerland-music-event-shooting-young-woman-killed




