சென்னை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘AA23’ திரைப்படத்திற்கு இசையமைக்க அனிருத்திற்கு சுமார் ரூ.23 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் அனிருத். கடந்த 2012-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து பல சூப்பர் ஹிட் பாடல்களை வழங்கியுள்ளார். தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும். சுமார் 14 ஆண்டுகளாக இசைத்துறையில் பயணித்து வரும் அனிருத், தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களிலும் இசையமைத்து வருகிறார். ‘டிசி’, ‘ஜெயிலர் 2’, ‘தி பாரடைஸ்’ உள்ளிட்ட பல்வேறு படங்கள் அவரது இசையில் உருவாகி வருகின்றன. ‘ஏஏ23’ படத்தில் அனிருத் இதனிடையே, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘AA23’ திரைப்படத்திற்கும் இசையமைக்க அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். ‘புஷ்பா’ படங்களை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. ரூ.23 கோடி சம்பளமா? இந்த நிலையில், ‘ஏஏ23’ படத்திற்காக அனிருத்திற்கு பேசப்பட்டுள்ள சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்காக அனிருத்திற்கு சுமார் ரூ.23 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில், அனிருத்தின் சம்பளம் குறித்த இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/anirudh-composing-music-for-allu-arjuns-film-do-you-know-the-remuneration




