துபாய், 10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா (3 வெற்றியுடன் 6 புள்ளி), பாகிஸ்தான் (4 புள்ளி), 'பி' பிரிவில் முதல் இரு இடங்களை பெற்ற நடப்பு சாம்பியன் இலங்கை (6 புள்ளி), வங்காளதேசம் (4 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. தாய்லாந்து, ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம், இந் தோனேசியா அணிகள் வெளியேறின.இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் முதலாவது அரைஇறுதியில் 7 முறை சாம்பியனான இந்திய அணி, 2018-ம் ஆண்டு சாம்பியனான வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் நிகர் சுல்தானா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/asia-cup-semifinal-bangladesh-elects-to-bowl-against-india




