ஈரானுடன் பொருளாதார ரீதியாக இணைந்திருக்கும் நாடுகள் அமெரிக்காவின் இரண்டாம் கட்டப் பொருளாதாரத் தடைகளைச் சந்திக்கக்கூடும் என்று நேற்று அமெரிக்காவின் நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார். யாரும் அமெரிக்காவைக் கண்டுகொள்ளவில்லை! அமெரிக்காவின் இந்த எச்சரிக்கைக்கு ஈரான் நாடாளுமன்றத்தின் அவைத் தலைவர் முகமது பாகர் காலிபாஃப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ளார். “அமெரிக்கர்களின் இந்த வீம்பான பேச்சுக்களை யாரும் கண்டுகொள்வதில்லை என்பது அவர்களுக்கே தெரியும். ஈரான் - அமெரிக்காEconomic D-Day: பில்லியன் டாலர் ஆயுதங்களால் முடியாததை தடைகளால் செய்ய முடியுமா? ட்ரம்பின் திட்டம்! மற்ற நாடுகளுடனான தன் உறவுகளை மேலும் சுருக்கிக் கொள்ளும் அளவுக்கு அமெரிக்கா நிதி நிலையில் வலுவாக இல்லை. ஈரானின் வர்த்தகப் கூட்டாளிகள் ஊடகங்கள் மூலமாகவும், எங்களுக்கு அனுப்பிய செய்திகள் மூலமாகவும் அமெரிக்காவின் இந்த அறிவிப்புகளை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார் காலிபாஃப். ஈரானிடம் இரண்டு ஆண்டுகள் பிளான் ஈரானியப் பொருளாதார அமைச்சர் அலி மதானிசாதே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கொடுத்த பேட்டியில், “இந்த நாள்களுக்காக நாங்கள் நீண்ட காலமாகக் காத்திருந்தோம். அவர்களின் திட்டங்கள் என்ன என்பது எங்களுக்குத் தெரிந்தே இருந்தது. அரசாங்கத்திடம் இதற்கான இரண்டு ஆண்டு காலத் பிளான் இருக்கிறது. இந்த நிகழ்விற்கு ஈரான் அரசாங்கம் முற்றிலும் தயார் நிலையிலேயே இருக்கிறது. ஒருதுருவ உலகத்தின் (Unipolar world) காலம் முடிந்துவிட்டது. அதை அவர்கள் மீண்டும் ஒருமுறை உணர்வார்கள். அவர்கள் எதிலும் சற்றும் வெற்றி பெற முடியாது என்பதை அவர்களே காண்பார்கள்” என்று தெரிவித்துள்ளார். ஆக, ஈரான் அமெரிக்காவின் தடைகளுக்குத் தயாராகவே உள்ளது போலும். Gold: மீண்டும் ரூ.1.20 லட்சத்தைத் தாண்டிய தங்கம் விலை; என்னதான் காரணம் இதற்கு? இன்னும் உயருமா? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/iran-says-it-has-a-two-year-plan-to-counter-us-sanctions




