சென்னை, இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். தமிழகத்தில் த.வெ.க. அரசு அமைந்த பிறகு, சுதந்திர தினத்தில் முதல் முறையாக முதல்-அமைச்சர் விஜய் கோட்டை கொத்தளத்தில் இன்று தேசியக்கொடியை ஏற்றினார். இந்நிலையில், தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “பிற்போக்கையும், பழமையையும் வேரறுத்து, பன்மைத்துவத்தையும், ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே நமது இந்தியா! கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்! நாளை என்பதை அறிவாலும், ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம் – சகோதரத்துவம் – முற்போக்கு – மனிதநேயம் உள்ளிட்ட விழுமியங்களோடு ஒன்றுபட்டு முன்னேறுவோம்! அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/our-countrys-journey-towards-a-bright-future-must-succeed-mk-stalins-independence-day-greetings




