புதின் பாராட்டு உக்ரைன்-ரஷியா இடையே கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடங்கியது. இந்த போர், 5 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலையிட்டும், போர் முடிவுக்கு வரவில்லை. தூதரக முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதற்கிடையே, இந்த வாரம் மாஸ்கோவில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரஷிய அதிபர் புதின், "உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் பிரதமர் மோடி ஆர்வமாக உள்ளார். ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் அந்த பிரச்சினையை எழுப்புவார். இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மிக நல்ல யோசனைகளை அவர் வைத்துள்ளார்” என்று புகழாரம் சூட்டினார். உக்ரைன் நிபந்தனை இந்தநிலையில், இந்தியாவின் யோசனையை பரிசீலிக்க தயார் என்று உக்ரைன் வெளியுறவு மந்திரி அன்ட்றில் சிபிஹா அறிவித்துள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-உக்ரைன்-ரஷியா போர் நிறுத்தத்துக்கு சாத்தியமான யோசனைகள், இந்தியா, துருக்கி, எகிப்து, அமெரிக்காஆகிய நாடுகளிடம் இருந்து வந்துள்ளன. அவற் றில் இந்தியாவின் யோசனை, விரிவானதாகஇருக்கிறது. அதை பரிசீலிக்க தயாராக இருக்கிறோம்.ஆனால், எந்த ஒப்பந்தமும் போர் நடவடிக்கைகளுக்கு மட்டுமின்றி, எரிசக்தி, துறைமுக கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள், கருங்கடல் நிலவரம் ஆகியவற் றுக்கும் பொருந்துவதாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். ரஷியா வரவேற்பு உக்ரைன் மீது ரஷியா வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில், உக்ரைன் மந்திரி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுபோல், உக்ரைன் போருக்கு தீர்வு காண இந்தியா எடுக்கும் முயற்சிகளை ரஷியா வரவேற்கும் என்று ரஷிய கிரெம்ளின் மாளிகை செய்தித்தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் சமீபத்தில் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/ukraine-announces-readiness-to-consider-indias-ceasefire-proposal




