தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்ந்த ஆறு முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் விக்னேஷ் சட்டப்பேரவையில் வெளியிட்டார். அதில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பும் இடம் பெற்றது. அதன் விவரம் வருமாறு: டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்களில் 23 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வரும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றார். எவ்வளவு உயர்வு? அமைச்சர் விக்னேஷ் கூறியதாவது: டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் எம்ஆர்பி விதிமீறல்கள் உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுப்பதற்கும், ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, மேற்பார்வையாளர்களுக்கு 33 ஆயிரத்து 23 ரூபாய், விற்பனையாளர்களுக்கு 30 ஆயிரத்து 284 ரூபாய், உதவி விற்பனையாளர்களுக்கு 28 ஆயிரத்து 689 ரூபாய் என உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படும். பண்டிகை முன்பணம் மற்றும் பணி நேர சலுகைகள் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பண்டிகை முன்பணமாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மேலும், ஆண்டுதோறும் மூன்று சீருடைகளுக்கான துணி மற்றும் தையல் செலவாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.அத்துடன், டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் எட்டு மணி நேர பணி ஒதுக்கீடு, மாதத்திற்கு ஒரு நாள் விடுமுறை மற்றும் மாதத்தில் இரண்டு நாட்கள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்கப்படும். என்ற அறிவிப்பும் இடம் பெற்றது. டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு விற்றால் ஊழியர்கள் முதலில் இடைநீக்கமும், மீண்டும் தவறு செய்தால் நிரந்தரமாக பணி நீக்கமும் செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் விக்னேஷ் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/paid-weekly-holiday-for-tasmac-employees-minister-vignesh-announces-in-the-assembly




