சென்னை, சென்னை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பருவப் பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கான மாவட்ட ஊட்டச்சத்து குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. ஊட்டச்சத்து குழுக் கூட்டம் இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- சென்னை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பருவப் பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஊட்டச்சத்து குழுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட ஊட்டச்சத்து குழுவின் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், இன்று (30.09.2026) ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் இளம் பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த பல்வேறு அரசுத் துறைகளின் ஒருங்கிணைந்த செயல்படுதல், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து, மருத்துவச் சிகிச்சை, மாவட்ட ஆரம்பகால தலையீட்டு மையத்தின் (DEIC) வழிகாட்டுதல் மற்றும் சமூகப் பாதுகாப்புச் சேவைகளுடன் இணைத்தல், சமச்சீர் உணவு, ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான குடிநீர் பயன்பாடு குறித்து மக்களிடையே தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், மாவட்டத்தின் ஊட்டச்சத்து அளவீடுகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, ஊட்டச்சத்து மேம்படுத்தும் நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ளவும், அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து செயல்படும் போது மட்டுமே மாவட்டத்தின் ஊட்டச்சத்து குறியீடுகளில் நிலையான முன்னேற்றத்தை அடைய முடியும் என ஆணையாளர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், இணை ஆணையாளர் (கல்வி) க. கற்பகம், துணை ஆணையாளர் (சுகாதாரம்) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் மாவட்டத் திட்ட அலுவலர்கள் ஜெயஶ்ரீ, பி.முத்துலெட்சுமி, மாநகராட்சி, சமூகநலத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, மருத்துவத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பள்ளிக்கல்வித்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/nutrition-committee-meeting-chaired-by-the-chennai-corporation-commissioner



