மதுராந்தகம் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வேலைகளில் தவெக முகாம் மும்முரமடைந்திருக்கிறது. தொகுதியில் நடந்த பாக முகவர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,புதிய தலைமைச் செயலகம் திட்டம் குறித்தும் பேசியிருந்தார். Aadhav ஆதவ் பேசியதாவது, 'தலைமைச் செயலகம் இருக்கும் இடம் நம்முடையது அல்ல. இட நெருக்கடி அதிகமிருக்கிறது. கலைஞரும் அம்மாவும் கூட புதிய தலைமைச் செயலகம் கட்ட நினைத்தார்கள். மீனவ மக்கள் பட்டினப்பாக்கத்தில் போராடியிருக்கிறார்கள். பட்டினப்பாக்கத்தில் விரிவான திட்ட அறிக்கை மட்டுமே கேட்கப்பட்டிருக்கிறது. முதல்வர் இன்னமும் அந்த விஷயத்தில் முடிவெடுக்கவில்லை. மீனவர்களா தலைமைச் செயலகமா என்றால் மீனவர்கள் பக்கம்தான் முதல்வர் நிற்பார். கம்யூனிஸ்ட்டுகள் நம்மைப் பற்றி பேசுவது வருத்தமாக இருக்கிறது' என்றார். Aadhav பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு எதிராக மீனவ கிராம மக்கள் இணைந்து ஒன்று கூடி பேசி எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பட்டினப்பாக்கத்திலேயே மக்களை திரட்டி போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/pattinapakkam-secretariat-project-scrapped-minister-aadhav-hints-at-major-decision




