மதிமுக குறித்த தவெக அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சு குறித்து அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேசியிருக்கிறார். கோபிசெட்டிப் பாளையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "இன்னும் சில நாள்களில் மதிமுகவைப் போல அதிமுக ஆகிவிடும். மதிமுகவில் தலைவர்கள் மட்டும்தான் உள்ளனர். அதேபோல அதிமுக நிலைமையும் விரைவில் அப்படியாகி விடும்" என்று பேசியிருக்கிறார். செங்கோட்டையன் செங்கோட்டையனின் இந்தப் பேச்சு மதிமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று (ஆகஸ்ட் 25) பேசிய துரை வைகோ, “செங்கோட்டையனைத் தவெகவின் அமைச்சராக மட்டும் பார்க்கவில்லை. தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராகப் பார்க்கிறேன். வைகோ மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். நானும் அவரை பல முறை சந்தித்திருக்கிறேன். முதல்வர் விஜய் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார். அதனால்தான் மதிமுக, தவெக கூட்டணியை ஆதரிக்கிறது. இதற்காக எங்களுடைய 2 எம்.எல்.ஏக்களை இழந்திருக்கிறோம். இந்நிலையில் செங்கோட்டையன் அப்படி பேசியிருக்கக் கூடாது. அவரது பேச்சு மதிமுகவினரை புண்படுத்திவிட்டது. துரை வைகோ செங்கோட்டையன் நா தவறி கூட பேசியிருக்கலாம். அவர் வேண்டும் என்றே இப்படி பேசியிருக்க வாய்ப்பு இல்லை. வரும் காலங்களில் இது போன்ற பேச்சுகளைத் தவிர்த்துகொள்ள வேண்டும்" என்று கூறியிருக்கிறார். Toxic: "நான் கர்ப்பமாக இருந்த செய்தியை யஷிடம் சொன்னேன், அப்போது அவர்."- கியாரா அத்வானி நெகிழ்ச்சி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/sengottaiyan-spoke-about-mdmk-what-was-durai-vaikos-reaction



