சென்னை வேப்பேரியில் அமைச்சர் வன்னி அரசு நிருபர்களிடம் கூறியதாவது:- இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் வேட்பாளர்கள் நிறுத்துவது முன்பே தெரிந்திருந்தால், நாங்கள் வேட்பாளர்களை நிறுத்தியிருக்க மாட்டோம் என சீமான் தெரிவித்த கருத்தைப் பொறுத்தவரையில், அவர் கூறிய பல பொய்களில் இதுவும் ஒன்று.மாணவர் தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு என்ன காரணம்? என்ற உண்மையை அறிய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் சி.பி.சி.ஐ.டி. விசாரணை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். எங்களுக்கும் அதே கோரிக்கைதான் உள்ளது. அப்போதுதான் நீதி கிடைக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இருபக்கமும் பேரம் தே.மு.தி.க. கடந்த காலங்களில் பா.ஜனதாவோடு இணைந்து செயல்பட்டவர்கள். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அந்த கூட்டணியா அல்லது இந்த கூட்டணியா என்று இரு பக்கமும் பேரம் பேசியவர்கள்தான் தே.மு.தி.க. தலைவர்கள்.கடைசியாக ஒரு மேல்-சபை எம்.பி. சீட்டுக்காக தி.மு.க. கூட்டணிக்கு வந்தனர். இத்தகைய பின்னணி கொண்டவர்கள், எங்களைப் பார்த்து அமைச்சர் பதவிக்காக கூட்டணி மாறியதாக கூறுவது ஏற்புடையதல்ல. திருமாவளவன் கூறிய கருத்தை அவர்கள் சரியாக உள்வாங்கிக்கொள்ளவில்லை. எம்.பி. சீட்டுக்காக. நாங்கள் தி.மு.க. கூட்டணியில் நீண்ட காலமாக பயணம் செய்து வந்தோம். இந்தப் பயணத்தில் திடீரென புதிதாக ஒரு கட்சி வருகிறது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியை விட அவர்களுக்கு அதிகமாக கொடுத்திருக்கிறார்கள் என்பதுதான் தி.மு.க.வோடு எங்களுக்கு ஏற்பட்ட முரண்பாடுகளில் முக்கியமான ஒன்று. இது எங்களை தி.மு.க. எப்படி நடத்தியது என்று சொல்லப்பட்ட உண்மை சம்பவமாகும். இதில் தே.மு.தி.க.வை நாங்கள் குற்றம்சாட்டவில்லை. அதை புரிந்து கொள்ளாமல் பிரேமலதா பேசியது, அவரின் அறியாமையைக் காட்டுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் எப்போதும் பதவிக்காக செல்பவர்கள் இல்லை என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஒரு கூட்டணியில் எங்களுக்கான எண்ணிக்கை மற்றும் மதிப்பீடு எவ்வளவு என்று சொல்லும்போது ஏற்பட்ட கசப்பைதான் நாங்கள் வெளிப்படுத்தினோம். அது தே.மு.தி.க. மீதான குற்றச்சாட்டு அல்ல. இவ்வாறு அவர் கூறினார் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmdk-joined-the-dmk-alliance-for-the-sake-of-a-single-mp-seat-vanni-arasu-launches-a-scathing-attack




