3-வது அணி முயற்சி தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் தி.மு.க. கூட்டணி உடைந்தது. காங்கிரஸ், வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் விலகின. இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளும் விலகின.இதனால் தேசிய அளவில் காங்கிரஸ் கட்டமைத்த 'இந்தியா' கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியது. மேலும் காங்கிரஸ் பங்கேற்கும் அல்லது முன்னெடுக்கும் எந்தவொரு ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டையும் தி.மு.க. தலைமை எடுத்தது. எனவே தேசிய அளவில் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக 3-வது அணியை உருவாக்கும் முயற்சியாக மாநில கட்சிகளின் தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணியை தி.மு.க. மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. உத்தவ் தாக்கரேவுடன் சந்திப்பு அந்த வகையில் சமீபத்தில் மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரி யும், உத்தவ் சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரேவை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. சந்தித்து பேசியிருந்தார். அதனைத்தொடர்ந்து டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) தலைவர் சரத்பவாரையும், அவரது மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலேவை கனிமொழி சந்தித்தார். மம்தா பானர்ஜி இந்த நிலையில் அவர், மேற்கு வங்காள மாநில முன்னாள் முதல்-மந்தி ரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசி உள்ளார்.இந்த சந்திப்பு 3-வது அணி அமைப்பதற்கான அடித்தள பணி என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டாலும், மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வந்தால், அதில் மாநில கட்சிகள் என்ன நிலைப்பாட்டை எடுக்கும்? என்பதை அறிந்து கொள்வதற்காகவே கனிமொழி ஒவ்வொரு கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/mp-kanimozhis-surprise-meeting-with-mamata-banerjeean-attempt-to-form-a-national-level-third-front




