சென்னை, பேரறிஞர் அண்ணா 118 வது பிறந்தநாளை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிவித்திருப்பதாவது:- புகழாரம் அண்ணா! காலவெளியில் உன் இருப்பு சிறிதுதான் நீ வாழ்ந்தது 59.4 ஆண்டுகள் உன் பொதுவாழ்வு 35 ஆண்டுகள் கட்டியெழுப்பிய கட்சியோடு 19.5 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் வெறும் 22 மாதங்கள் ஆனால், நீ செய்த சாதனை புரிய 300 ஆண்டு வாழ்ந்தவனாலும் முடியாது உன் பெயர் சொல்லாமல் அரசாள இயலாது உன் கொள்கை இல்லாமல் அரசியல் கிடையாது நீ சாமானியர்க்காகவே வாழ்ந்தவன்; சாமானியனாகவே மரித்தவன் பூமியின் மீது அதிகச் சிலைகள் புத்தருக்கு; இந்தியாவில் அம்பேத்கருக்கு; தமிழ்நாட்டில் உனக்கு பொன்னடிகளுக்குப் புகழ் வணக்கம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/anna-is-the-leader-with-the-most-statues-in-tamil-nadu-poet-vairamuthu-praises




