சென்னை, ’தற்போதைய தலைமைச் செயலகத்தில் என்ன பிரச்சினை?” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். வெறும் அறிவிப்பு இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது: ’பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் என்பது அறிவிப்பு தான், நடக்கப்போவதில்லை, கட்டப்போவதில்லை, கட்டவிடப்போவதில்லை. புதிய தலைமை செயலகம் வேண்டும் என சிலர் அறிக்கை விடுகிறார்கள், தற்போதைய தலைமை செயலகத்தில் என்ன பிரச்சினை உள்ளது?’ என்றார். ஓமந்தூரார் மருத்துவமனை “உங்களுக்கு புதிய தலைமைச் செயலகம் வேண்டும் என்றால், ஓமந்தூரார் மருத்துவமனையை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, அந்த இடத்தில் தலைமைச் செயலகத்தை அமைத்துக்கொள்ளுங்கள். கடன் வாங்கி, கடன் வாங்கி அதற்கு வட்டி கட்டிக்கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற செலவு தேவையா?” என்றும் சீமான் கேள்வி எழுப்பினார். நெரிசல் ஏற்படும் ’சென்னையில் எங்கு தலைமைச் செயலகம் கட்டினாலும் நெருக்கடி ஏற்படும். சொந்த ஊரில் அகதியாக இருக்க முடியாது’ என்றும் சீமான் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-not-allow-the-new-secretariat-to-be-built-at-pattinapakkam-seeman




