லக்னோ, உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி மாவட்ட செயலாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி செயல்பட்டு வருகிறது. இதனிடையே, அக்கட்சியின் பிரயாக்ராஜ் மாவட்ட செயலாளராக பவன் செயல்பட்டு வந்தார். ஹண்டியா கிராமத்தை சேர்ந்த இவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவராகவும் செயல்பட்டுள்ளார். சமாஜ்வாதி கட்சி மாவட்ட செயலாளர் சுட்டுக்கொலை இந்நிலையில், பவன் இன்று ஹண்டியா கிராமத்தில் இருந்தபோது அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிசென்றனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பவனை மீட்ட கிராமத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், பவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சமாஜ்வாதி கட்சி மாவட்ட செயலாளரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த துப்பாக்கிசூடு சம்பத்திற்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/horror-in-up-samajwadi-party-district-secretary-shot-dead




