சென்னை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 118ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் மதுவிலக்கையும், சமூகநீதியையும் ஆதரித்தவர்; அவை தொடர்பான கொள்கைகளில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தவர் என்ற வகையில் அவருக்கு எனது வணக்கங்களையும், மரியாதைகளையும் செலுத்துகிறேன். செண்பகம் துரைராஜன் வழக்கில் தமிழகத்தில் நடைமுறையில் இருந்த இட ஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முழங்கி தந்தைப் பெரியார் போராடிய நிலையில் அறிஞர் அண்ணாவும் திமுக சார்பில் தொடர் போராட்டங்களை நடத்தி சமூகநீதி கோரிக்கைக்கு வலு சேர்த்தார். அப்போராட்டங்களின் பயனாகத் தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டு தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மாநில சுயாட்சி கொள்கையில் உறுதியாக இருந்தவர். மதுவிலக்கை நீக்கினால் வருவாய் கொட்டும் என அதிகாரிகள் ஆசை காட்டிய போதும், மக்கள் நலனே முக்கியம் என்று கூறு மதுக்கடைகளை திறக்க மறுத்தவர். அவரது இந்த கொள்கை துணிவையும், மக்கள் நலனையும் இந்த நாளில் போற்றி வணங்குவோம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-cherish-annas-clarity-of-principles-and-steadfastness-anbumani-ramadoss




