தென்காசி, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில வாரங்களாக நீர்வரத்து மிகக்குறைந்த அளவிலேயே இருந்தது. இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.இதனால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், குற்றாலத்தில் நீர்வரத்து இன்று சீரானது. இதனால், 2 நாட்கள் தடைக்கு பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், சுற்றுலாவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று வார விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து அங்குள்ள அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் குற்றாலத்தில் தற்போது நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை போலீசார் வெளியேற்றினர். தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-tourists-bathing-at-courtallam-main-falls




