கோவை, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சென்னை மங்களூரு ரெயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- வருகிற 5-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை மங்களூருவில் இருந்து கோவை, ஈரோடு, கரூர், திருச்சி வழியாக இயக்கப்படும் மங்களூரு சென்டி ரல் சென்னை எழும்பூர் ரெயில் (எண்:16160) மங்களூரு தாம்பரம் இடையே மட்டும் இயக்கப்படும். தாம்பரம் -எழும்பூர் இடையே இந்த ரெயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல 6-ந் தேதி முதல் 20-ந்தேதி வரை சென்னை எழும்பூரில் இருந்து மங்களூருவுக்கு இயக்கப்படும் சென்னை எழும்பூர் மங்களூரு சென்டிரல் ரெயில் (எண்:16159) தாம்பரத்தில் இருந்து மங்களூருவுக்கு இயக்கப்படும். சென்னை எழும்பூர் நிலையத்தை பயன்படுத்தி பயணம் செய்ய உள்ள பயணிகள், மேற்கண்ட தற்காலிக மாற்றங்களை கவனத்தில் கொண்டு தங்களது பயணத்தை முன் கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/mangaluru-train-service-via-coimbatore-partially-cancelled




