காஞ்சிபுரம், இடைத்தேர்தலில் ரூ.10,000 கொடுத்தாலும் திமுக வெற்றி பெற முடியாது என மதுராந்தகம் தேர்தல் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசி உள்ளார். மதுராந்தகம் தேர்தல் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:- மூச்சுகூட விட முடியாது போல ஒரு அமைச்சராப் பேசுவதைவிட, ஒரு தவெக தொண்டனாகப் பேசுவதில் எனக்கு மகிழ்ச்சி. நான் சட்டமன்றத்தில் பேசினாலே, ‘ப்ரோட்டோகால், ப்ரோட்டோகால்' என்று சொல்லி பேசவிட மாட்டிக்கிறார்கள். அது என்னவோ தெரியவில்லை; நான் எழுந்து நின்றாலே பேசவிட மாட்டிக்கிறார்கள். அடுத்த முறை மூச்சுகூட விட முடியாது போல. மூச்சுவிட்டாலே கத்த ஆரம்பித்துவிடுவார்கள். ஆலமரம். முருங்கை மரம். சட்டமன்றத்தில் எல்லாத்தையும் பேக் பண்ணி அனுப்பிவிட்டோமா? 75 வருட கட்சி, ஒரு ஆலமரம், முருங்கை மரம் என்று எல்லாம் சொன்னார்கள். சட்டமன்றம் வரும்போது, இவர்களுக்குத்தான் அரசியல் தெரியும் என்பது போல எல்லோரும் கிளம்பி வந்தார்கள். ஆனால், முடியும் போது யாருமே சட்டமன்றத்தில் இல்லை.அதுவும் முதல்வர் வரும்போது சுத்தமாக இருக்க மாட்டார்கள். அவர பேசு, பேசு என்று சொல்வார்கள். பேச ஆரம்பித்தால் வெளியே போய்விடுவார்கள். தீபாவளி பணம் வருது "திமுக இங்கே டிபாசிட் இழக்கும்; கடந்த முறை எப்படி ரூ.5 ஆயிரம் வாங்கினீர்களோ, அதே போல இந்த முறையும் ரூ.5 ஆயிரத்தோடு திமுக வருவாங்க. தீபாவளிக்கு டிரஸ் வாங்கித் தர பணத்தோடு வருவார்கள். அனைத்தையும் வாங்கிக் கொண்டு, போன முறை போல இந்தமுறையும் விசிலுக்கு போட்டுவிடுங்கள். ஓட்டுக்கு பணம் கிடையாது "எழுதி வெச்சுக்கோங்க, இடைத்தேர்தலில் தவெக ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம், இத்தனை காலமாக பாரம்பரியமாக இருந்த இந்த கலாச்சாரத்தை உடைப்போம். நீர்வளத்துறை அமைச்சர் வந்திருக்கார், பொதுப்பணித்துறை அமைச்சர் நான் வந்திருக்கேன், குடிநீர் இல்லை, ரோடு இல்லைனு இனி சொல்லாதீங்க' எடப்பாடியில் ஈபிஎஸ்-யை தோற்கடிப்போம் தவெகவிடம் பணம் வாங்கிவிட்டு ராஜினாமா செய்ததாக ஈபிஎஸ் சொல்கிறார். எடப்பாடி தொகுதியில் ஏன் தவெக வேட்பாளர் வாபஸ் வாங்கினார்? விசில் சின்னம் அங்கு நின்றிருந்தால், அவரும் தோற்றிருப்பார். மதுராந்தகத்திற்கு ஈபிஎஸ் 4 நாள்கள் பிரசாரத்திற்கு வருகிறாராம். அங்கே ரிசைன் பண்ணிவிட்டு, எடப்பாடியில் அவர் நிக்கட்டும். ஒரு கல்லூரி பெண்ணை நிறுத்தி, அவரை தோற்கடிப்போம். அப்படி தான் இன்றைய அதிமுக உள்ளது. இரட்டை இலை முடிந்துவிட்டது "கடந்த தேர்தலில் அதிமுக வாங்கிய ஓட்டு, இரட்டை இலைக்கு கிடைத்த வாக்குகள். இரட்டை இலையும், விசிலும் ஒன்றாகிவிட்டது. பெரிய வித்தியாசம் இல்லை; மக்கள் உணர்ந்துவிட்டார்கள். திமுகவை எதிர்த்து அரசியல் செய்யும் வலிமை, விஜய்க்கு மட்டும் தான் உள்ளது. தற்போது இருப்பது எடப்பாடி அதிமுக தான், இரட்டை இலை முடிந்துவிட்டது. எம்ஜிஆர், ஜெ., ஆத்மா விசில் சின்னத்தில் இருக்கிறது. நெஞ்சை நிமிர்த்தி கம்யூ., சொல்லுமா? கம்யூ., தோழர்களைக் கேட்கிறேன். கடந்த ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில், பொதுப்பணித் துறையில் ஊழல் நடந்ததா இல்லையா? குடும்ப நிதி, கட்சி நிதி வாங்கினார்களா இல்லையா? நெஞ்சை நிமிர்த்தி கம்யூ.,னிஸ்ட்கள் சொல்ல முடியுமா? திமுக ஊழல் செய்யவில்லை என்று சொல்ல முடியுமா? அதிமுக ஆதரவு கேட்டு முதல்வர் ஆகியிருக்கலாம் "எங்கள் தலைவர் நினைத்திருந்தால், அதிமுகவிடம் ஆதரவு கேட்டு, அவர்களுக்கு 15 மினிஸ்டர் கொடுத்து முதல்வர் ஆகியிருக்க முடியும். எதற்காக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உடன் கூட்டணி சேர்ந்தார். சமூகநிதியில் அவர் உறுதியாக இருந்தார்." விஜய் இன்னும் முடிவெடுக்கவில்லை பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டமன்றம் அமைப்பதற்கான ஆய்வுதான் மேற்கொண்டு வருகிறோம். இதுவரை அங்கு அமைப்பதற்கான எந்த முடிவையும் முதல்வர் விஜய் எடுக்கவில்லை. உடனே அதில் அரசியல் செய்து, மீனவர்களை ஏமாற்றுகிறார்கள். தலைமைச் செயலகமா, மீனவர்களின் வாழ்வா என்றால், தலைமைச் செயலகத்தைவிட மீனவர்கள் பக்கம்தான் எங்கள் தலைவர் இருப்பார். கம்யூ., தோழர்கள் பேசுவதுதான் வருத்தமாக இருக்கிறது. எம்.ஜி.ஆர்.ஐ சேர்த்துக் கொள்ளுங்கள் அதிமுக உடையக்கூடாது என்பது தான் எம்ஜிஆர்.,யின் ஆசை. ஈபிஎஸ் அதை சுக்குசுக்காக உடைத்துவிட்டார். அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் ஆகியோருக்கு இரு கோரிக்கை, தவெகவின் 5 கொள்கை தலைவர்களுடன் எம்ஜிஆர்.,யும் கொள்கை தலைவராக சேர்த்துக் கொள்ள வேண்டும், எனக்கு நீங்கள் இருவரும் தவெக துண்டு அணிவிக்க வேண்டும். தவெக ஜெயிச்சது எப்படினு இன்னமும் ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்காங்க. தீபாவளிக்கு திமுக ரூ.5 ஆயிரம் பணத்துடன் வரும். இடைத்தேர்தலில் ரூ.10,000 கொடுத்தாலும் திமுக வெற்றி பெற முடியாது. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-cannot-win-by-election-even-if-rs-10000-is-given-adhav-arjunas-speech




