'டான் பிக்சர்ஸ்' ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'இதயம் முரளி' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதர்வா, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனனும் ஒரு சிறிய கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதயம் முரளி படத்தில். அதே போல், நடிகர் பகத் பாசிலும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் இப்படத்தில் நடித்திருக்கிறார். 'இதயம் முரளி'யில் நடித்தது குறித்து அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன். July Releases: 'இதயம் முரளி' முதல் 'சிக்மா' வரை! - இம்மாதம் ரிலீஸுக்கு ரெடியாகியிருக்கும் படங்கள்! அதில் அவர், "'இதயம் முரளி' படத்தில் குட்டி கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஒரு தமிழ்ப் பெண்ணாக, மணப்பெண் அலங்காரத்தில் வருகிறேன். என் அன்பிற்குரிய காஸ்டியூம் டிசைனர் பல்லவி, 'மாஸ்டர்' திரைப்படத்திற்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் ஒரு படத்திற்காக என்னை இப்படி அழகாகத் தயார் செய்திருக்கிறார். இந்த அழகான லுக்கை அவரோடு இணைந்து செய்தது எனக்குள் ஒரு தனி சந்தோஷத்தைத் தந்தது. பகத் பாசிலுடன் இணைந்து ஒரு ஜாலியான சீனில் நடித்திருக்கிறேன். நாங்கள் இருவரும் பல வருடங்களாக நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம். Fahad Fazil - Malavika Mohanan எப்போதுமே 'நாம் இருவரும் ஒரு முழுநீளத் திரைப்படத்தில் இணைந்து நடிக்க வேண்டும்' எனப் பேசிக்கொண்டே இருப்போம். இப்போது, இந்தச் சின்ன கேமியோ ரோல் ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும் என நினைக்கிறேன். மூன்றாவதாக, 'இதயம் முரளி' படத்தின் இளமையான மற்றும் கலகலப்பான ஒட்டுமொத்தப் படக்குழுவோடு இணைந்து பணியாற்றியது பயங்கர ஜாலியாக இருந்தது. அவர்களோடு ஸ்பாட்டில் இருக்கும்போது, ஏதோ மீண்டும் கல்லூரி நாள்களுக்கே திரும்பிப் போனது போன்ற ஒரு பாசிட்டிவ் எனர்ஜியைத் தந்தது" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார். Idhayam Murali Review: நம் இதயத்துக்கு நெருக்கமாகின்றனவா இந்த இதயாவின் ஒரு தலை ராகங்கள்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://cinema.vikatan.com/kollywood/actress-malavika-mohanan-about-her-cameo-appearance-in-idhayam-murali-movie




