நேற்று காந்தி ஜெயந்தி. இதை முன்னிட்டு, இந்தியாவில் நடக்கும் பாதிப்புகள் மற்றும் பிரச்னைகளை முன்னெடுத்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலைதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இந்த வலைதளத்தில் தங்களுக்கு நேர்ந்த அநீதிகளை மக்கள் பகிர்ந்துகொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது. “நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகிறார்கள். பல நேரங்களில் தனியாக நின்று போராடுகிறார்கள். देशभर में लोग अपने हक़ के लिए लड़ रहे हैं - और अक्सर अकेले लड़ रहे हैं। Gen Z, छात्र, किसान, आदिवासी, दलित, महिलाएँ - हर संघर्ष की अपनी कहानी है। पर जो आवाज़ अकेली उठती है, वो अक्सर दब जाती है। 'सत्याग्रह' इन्हीं आवाज़ों को एक नक्शे पर साथ लाने की पहल है। बापू ने यही सिखाया था… — Rahul Gandhi (@RahulGandhi) October 3, 2026 `ஹெராயின், மெத்தம்பெட்டமைன் கடத்திய கடத்தல் மன்னன் இந்தியாவுக்கு நாடு கடத்தல்' - அமித் ஷா பெருமிதம் Gen Z இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், பழங்குடியினர், தலித்துகள், பெண்கள் என ஒவ்வொரு போராட்டத்திற்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. ஆனால், தனியாக ஒலிக்கும் குரல் பெரும்பாலும் ஒடுக்கப்பட்டு விடுகிறது.இந்தக் குரல்களை எல்லாம் ஒரே வரைபடத்தில் ஒருங்கிணைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு முயற்சிதான் ‘சத்யாகிரஹா’. உண்மைதான் மிகச்சிறந்த ஆயுதம் என்பதை பாபு நமக்குக் கற்றுக் கொடுத்தார். ஆனால், உண்மையின் பக்கம் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து நிற்பது அதைவிடப் பெரிய ஆயுதமாகும்.நீங்களும் ஏதேனும் ஒரு அநீதிக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தால், உங்கள் கதையைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அதற்கு வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே ஆகும். உங்கள் கதை அந்த வரைபடத்தில் இடம்பெறும். உங்களைப் போலவே வேறு யாரெல்லாம் போராடுகிறார்கள் என்பதை நீங்கள் அதில் பார்க்க முடியும். நாடாளுமன்றத்தில், வீதிகளில், கடிதங்கள் எழுதுவதன் மூலம் அல்லது உங்களுடன் நேரில் நிற்பதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எனக்குரிய பொறுப்பை உணர்ந்து, உங்களுக்குத் தேவையான அனைத்து வழிகளிலும் நான் துணையாக நிற்பேன். உங்கள் ‘சத்யாகிரஹா’ கதையை இங்கே எங்களிடம் கூறுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்தி தொடங்கியுள்ள வலைதளத்தின் லிங்க் - rahulgandhi.in/satyagraha 'ஓமன் நாட்டில் விமானம் இயக்க தடை' Flydubai சம்பவத்திற்கு காரணமான உதவி விமானி ஹமாம் அல்ஹமாமி யார்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/rahul-gandhi-launches-website-to-map-peoples-injustice



