சிவகங்கை, சிவகங்கை மாவட்டத்தில் அனுமதி பெறாமல் விதிகளை மீறி செயல்பட்டு வந்த 16 தனியார் மழலையர் பள்ளிகளை மூட மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். அனுமதியின்றி செயல்பட்ட பள்ளிகள் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மழலையர் பள்ளிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உரிய அனுமதி பெறாமல் விதிகளை மீறி 16 தனியார் மழலையர் பள்ளிகள் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இதையடுத்து, அந்த 16 பள்ளிகளையும் உடனடியாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், உத்தரவை மீறி தொடர்ந்து பள்ளிகள் செயல்படுவது கண்டறியப்பட்டால், பள்ளி நிர்வாகத்தின் மீது சட்டப்படி கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/order-issued-to-close-16-preschools-in-sivaganga




