டெல்லி, நேபாளத்திற்கு மேலும் 11 டன் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. நேபாள வெள்ளம் நேபாளத்தில் கடந்த மாதம் 26ம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேபாள-திபெத் எல்லையில் பனிப்பாறை உடைந்து ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நேபாளம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி இந்தியர்கள் உள்பட 1,410 பேர் உயிரிழந்தனர். மேலும், 6,145 பேர் மாயமாகியுள்ளனர். நேபாளத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், வெள்ளத்தில் மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தியா நிவாரண உதவி இதனிடையே, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு இந்தியா தொடர்ந்து நிவாரண உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில், நேபாளத்திற்கு மேலும் 11 டன் நிவாரண உதவியை இந்தியா செய்துள்ளது. உணவு, மருந்து, அத்தியாவசிய பொருட்கள் உள்பட 11 டன் நிவாரண பொருட்கள் இந்தியாவில் இருந்து விமானம் மூலம் நேபாளம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பிற்குப்பின் நேபாளத்திற்கு 9வது முறையாக இந்தியா நிவாரண உதவிகளை அனுப்பி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/india-sends-11-tonnes-of-relief-supplies-to-flood-hit-nepal




