''நான் ரிட்டயர்ட் ஆகி ஓய்வு பெற இன்னும் 20 ஆண்டுகள் இருக்கிறது. பணவீக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்க என் ஓய்வுக் காலத்தில் என்னிடம் 3 கோடி ரூபாய் இருக்க வேண்டும் என்பதை நன்கு புரிந்துகொண்டுவிட்டேன். ஆனால், இவ்வளவு பெரிய தொகையை என்னால் சேர்க்க முடியுமா என்பது மலைப்பாக இருக்கிறது. இந்தத் தொகையைச் சேர்ப்பது கடினமா அல்லது எளிதான காரியமா? கடினம் இல்லை எனில், நான் மாதந்தோறும் எவ்வளவு ரூபாயை சேர்க்க வேண்டும் என்பதை சொல்லுங்கள்.'' என்று கேட்டிருந்தார் சென்னை வேளச்சேரியில் வசிக்கும் ராகவேந்திரன். அவருக்கான பதிலைப் பார்ப்போம். மியூச்சுவல் ஃபண்ட் ''டியர் ராகவேந்திரன். உங்கள் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான பணத்தை எப்படிச் சேர்ப்பது என்பது குறித்து நீங்கள் யோசிக்கத் தொடங்கி இருப்பதற்குப் பாராட்டுகள். உங்களுக்கு வந்திருக்கும் இந்தச் சிந்தனை எல்லோருக்கும் அவசியம் வரவேண்டும். அப்போதுதான் ஓய்வுக் காலத்தில் பணக் கஷ்டம் இல்லாமல் இருக்கும். உங்கள் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான 3 கோடி ரூபாயைச் சேர்ப்பது கடினமா, எளிதான காரியமா என்று கேட்டால், ஆம்/இல்லை என்பதே பதில். கடினம்தான் என்று சொன்னால், அதற்கான காரணங்கள் என்ன என்று பார்த்தால், நீங்கள் திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும். உங்கள் முதலீடு டைவர்சிஃபைட்-ஆக இருக்க வேண்டும். நீண்ட காலத்தில் அந்த முதலீடு ஆண்டுதோறும் 12% கூட்டு வளர்ச்சி (CAGR) அடைய வேண்டும். இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைப் பார்த்து, நீங்கள் டென்ஷன் ஆகாமல், தொடர்ச்சியாக நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, உங்களுக்கு சரியான வழியைக் காட்டக்கூடிய ஒரு நிபுணரின் வழிகாட்டலுடன் அந்த முதலீட்டை நீங்கள் செய்ய வேண்டும். இந்த விஷயங்கள் எல்லாம் இல்லாவிட்டால், உங்கள் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான 3 கோடி ரூபாயைச் சேர்ப்பது கடினம்தான். இல்லை, 3 கோடி ரூபாயைச் சேர்ப்பது எளிதான காரியம் எனில், அதற்கான காரணங்கள் என்ன? முதலில் உங்களுக்கு சரியான வழியைக் காட்டக்கூடிய ஒருவர் இருக்க வேண்டும். மாதந்தோறும் எவ்வளவு ரூபாயை சேர்க்க வேண்டும், எத்தனை ஆண்டுகளுக்குச் சேர்க்க வேண்டும், இதற்கு நம் முதலீடு எப்படி டைவர்சிஃபைட்-ஆக இருக்க வேண்டும் என்பதெல்லாம் தெரிய வேண்டும். முக்கியமாக, நீங்கள் செய்யும் முதலீடு ஆண்டுதோறும் 12% கூட்டு வளர்ச்சியில் லாபம் தருகிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். நீண்ட காலத்தில் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவ்ல் ஃபண்ட் திட்டத்தின் மூலம் நல்ல லாபம் பார்க்க முடியும் என்கிற நம்பிக்கையில் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். இந்த விஷயங்களை எல்லாம் மனதில் கொண்டு நீங்கள் உங்கள் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான 3 கோடி ரூபாயை எளிதாக சேர்க்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை. மியூச்சுவல் ஃபண்ட் சரி, உங்கள் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான 3 கோடி ரூபாயை எப்படிச் சேர்ப்பது எனில், அதற்கு பெஸ்ட் வழி, மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் மூலம் சேர்ப்பதுதான். இதில் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். தங்கத்தில் முதலீடு செய்யும் கோல்டு சேவிங் திட்டமும் உள்ளது. அதிக ரிஸ்க் இல்லாத கடன் சந்தை சார்ந்த திட்டமும் உள்ளது. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதன் மூலம் நீண்ட் காலத்தில் ஆண்டுதோறும் 12% லாபம் கிடைக்க நிறையவே வாய்ப்பு உள்ளது. இதற்கு மாதந்தோறும் 30,000 ரூபாயைச் சேர்த்தால், நீங்கள் மொத்தம் 72 லட்சம் ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். இது 2.75 கோடியாக வளர்ந்திருக்கும். நீங்கள் மாதந்தோறும் 35,000 ரூபாயைச் சேர்த்தால், மொத்தம் 84 லட்சம் ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். அது 3.21 கோடியாக வளர்ந்திருக்கும். மாதந்தோறும் 30,000 ரூபாயைக் கட்டுவது கொஞ்சம் கடினம் என்பவர்கள், ஸ்டெப் அப் முறையில் ஆண்டுதோறும் 10% முதலீட்டை அதிகரிக்கலாம். இதற்கு முதல் ஆண்டில் 15,000 முதலீடு செய்யத் தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் 10% முதலீட்டை அதிகரிக்கலாம். இப்படி செய்யும்போது ஆரம்பத்தில் குறைந்த தொகையை முதலீடு செய்ய முடிந்தாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகமான தொகையை முதலீடு செய்ய வேண்டிய நிலையில் இருப்பீர்கள். ஆக, நீங்கள் 3 கோடி ரூபாயைச் சேர்க்க வேண்டும் எனில், இதுதான் பெஸ்ட் வழி. உங்கள் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான பணத்தை 40 வயதில் ஆரம்பிக்காமல், 30 வயதில் சேர்க்கத் தொடங்கினால், இன்னும் குறைவான முதலீட்டில் அதிகமான பணத்தைச் சேர்க்க முடியும். 25 வயதில் சேர்க்கத் தொடங்கினால், இன்னும் குறைவான முதலீட்டில் அதிகமான பனத்தைச் சேர்க்க முடியும். ராகவேந்திரன், இதை எல்லாம் மனதில் கொண்டு இப்போதே முதலீடு செய்யத் தொடங்குங்கள். உங்கள் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான பணம் 3 கோடி ரூபாயை நீங்கள் சேர்க்க முடியும்''. இந்தக் கேள்விக்கான பதில் ராகவேந்திரனுக்கு மட்டுமல்ல, ஓய்வுக் காலத்துக்குத் தேவையான பணத்தைச் சேர்க்க நினைப்பவர்கள் அத்தனைப் பேருக்கும் ஏற்ற பதில்தான் இது. லாபம் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான பணத்தைச் சேர்க்கணுமா? மியூச்சுவல் ஃபண்டில் SIP முதலீட்டை ஆரம்பிக்க நினைப்பவர்கள் லாபம் நிறுவனத்தின் பின்வரும் தொலைபேசி எண்களை அழைக்கலாம்! ஏ.ஆர்.குமார் - 89259 44568 சபரிநாதன் - 89259 44569 தங்கலட்சுமி - 95007 77894 வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டைச் சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள். வெளிநாட்டில் வசிப்போருக்கு: இந்தியாவில் வசிப்போருக்கு: Labham Youtube Channel: Labham Website: முதலீட்டாளர்களின் கவனத்துக்கு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/personal-finance/retirement-investment-plan-root-map-for-3-crore-rs




