கோவை, பால்கன்-9 ராக்கெட் அமெரிக்காவின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பால்கன்-9 ரக ராக்கெட், நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, கடந்த ஆண்டு ஜனவரி 15-ந்தேதி 2 லேண்டர்களுடன் நிலவுக்கு புறப்பட்டு சென்றது. 2 லேண்டர்களும் நிலவை அடைந்து விட்டன. அதில், ஒரு லேண்டர் நிலவின் மீது மோதி விட்டது. 'புளு கோஸ்ட்' என்ற மற்றொரு லேண்டர் நிலவில் வெற்றியுடன் தரையிறங்கி உள்ளது. 2 வாரங்கள் செயல்பட்டு, நிலவில் சூரியன் மறையும் புகைப்படம் ஒன்றை எடுத்து அனுப்பியது. எனினும், நிலவில் சூரியன் மறைந்ததும் தன்னுடைய ஆற்றலை அது இழந்தது. இந்த நிலையில், லேண்டர்களை இறக்கி விட்ட அந்த ராக்கெட்டின் மேல் பகுதி, தன்னுடைய வேலையை முடித்து விட்டு பூமிக்கு திரும்ப வேண்டும். ஆனால், அது உயர்மட்ட சுற்று வட்டப்பாதையில் சிக்கிக்கொண்டது. விஞ்ஞானிகள் ஆய்வு பூமிக்கு திரும்பாததால், ராக்கெட் என்ன ஆனது? என விஞ்ஞானிகள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். இதுபோன்று 1,053 முறை கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டதில், பல முறை பூமி மற்றும் நிலவு ஆகியவற்றின் சுற்றுவட்டப்பாதைகளை அது கடந்து சென்றது கவனிக்கப்பட்டது. ஆனால், அதன் மீதும் மோதும் வகையில் நெருங்கி செல்லவில்லை. இந்த விண்கலப் பகுதி எரிபொருள் தீர்ந்து கட்டுப்பாட்டை இழந்து நிலவை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் நிலவின் மேல்பரப்பில் இந்த மோதல் விரைவில் நடக்கப்போகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி, சுற்றுவட்டப்பாதை தொடர்பான விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வந்தனர். அதன் பயணம் மற்றும் வருங்காலத்தில் அதற்கு என்ன நடக்கும்? என்பது பற்றி கணித்துள்ளனர். அச்சப்பட தேவையில்லை. அதன்படி, வருகிற 5-ந்தேதி மதியம் 1.14 மணியளவில் அது நிலவில் உள்ள ஐன்ஸ்டீன் பள்ளம் அருகில் மோதக்கூடும். அப்போது மணிக்கு 8 ஆயிரத்து 700 கி.மீ. அல்லது ஒலியின் 7 மடங்கு வேகத்தில் அது இயங்கும் என விஞ்ஞானிகள் தெரி வித்துள்ளனர். இதனால், யாரும் அச்சப்பட தேவையில்லை. விண்வெளியில் இதுபோன்ற குப்பைகள் சேராமல் அதனை கவனத்துடன் அகற்றுவது பற்றிய தேவையை உணர்த்தியுள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அந்த ராக்கெட்டின் மேல் பகுதி, இதுவரை 26 நாட்களில் பூமியை ஒரு முறை சுற்றி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/falcon-9-rocket-about-to-crash-into-the-moon-no-need-to-panic




