சென்னை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று சென்னை கிண்டியில் "வெப்பத் தாங்கு திறன் கொண்ட தமிழ்நாட்டை நோக்கி" வெப்ப அபாய மேலாண்மை பயிலரங்கினை தொடங்கி வைத்தார்கள். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தனது தலைமையுரையில், இந்த அரசு பொறுப்பேற்ற பின், பேரிடர் மேலாண்மையில் முன்னெச்சரிக்கை, ஆயத்தநிலை, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் வசம் முன்கூட்டியே நிதி இருப்பது அவசியமாகும் என்பதை கருத்தில் கொண்டு, ரூ.50 கோடி சுழற்சி நிதியை தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தேவைக்கேற்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு இந்த நிதி உடனடியாக வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். தன்னார்வலர்கள் மேலும், மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான முன்களப் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக, 550 ஆப்தா மித்ரா தன்னார்வலர்களும், 6,034 யுவா ஆப்தா மித்ரா தன்னார்வலர்களும் பேரிடர் மேலாண்மையில் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் ரூ.55 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளதாகவும், இந்நிறுவனம், பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சி, ஆராய்ச்சி, திறன் மேம்பாடு, கொள்கை ஆதரவு மற்றும் அறிவியல் புதுமைகளுக்கான மாநிலத்தின் தலைமை நிறுவனமாக விளங்கும் எனவும் தெரிவித்தார். மாநில வெப்ப செயல் திட்டம் - 2026 தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு பேரிடர் அபாயக்குறைப்பு முகமை தயாரித்துள்ள தமிழ்நாடு மாநில வெப்ப செயல் திட்டம் - 2026, கடந்த 09.06.2026 அன்று வெளியிடப்பட்டதாகவும், இத்திட்டம் நாட்டிலேயே மிகவும் விரிவான வெப்ப செயல் திட்டங்களில் ஒன்றாகத் திகழ்வதாகவும் தெரிவித்தார். இப்பயிலரங்கில், தமிழ்நாட்டிற்கான விரிவான மாநில வெப்பச்செயல் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாகவும், வெப்பத்தை எதிர்கொள்ளும் திறனுக்கான நிலையான குளிர்விப்பு மற்றும் வெப்பத்தாக்கத்தை ஆற்றுப்படுத்துதல் தொடர்பாகவும், தமிழ்நாட்டில் வெப்பத்தை தாங்கும் திறன் கொண்ட கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளை ஏற்படுத்துதல் தொடர்பாகவும், தீவிர வெப்பச்சூழலில் எரிசக்தி அமைப்பின் மீள்திறன் மற்றும் தேவை மேலாண்மை குறித்தும் வல்லுநர்களால் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்திய வானிலை ஆய்வு இப்பயிலரங்கில், தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை, இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம், புனே-உடன், நகர்ப்புற வானிலை ஆய்வு, தீவிர வானிலை பகுப்பாய்வு, இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் குறித்த ஆய்வுகள் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதோடு, சென்னையில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய வார்டுகளில் கடும் வெப்பத்தைச் சமாளிப்பதற்கான ஆயத்த நிலையை வலுப்படுத்தவும், அதன் தாக்கத்தைக் குறைக்கவும், விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்கான ‘திட்ட மேலாண்மைப் பிரிவை' அமைப்பதற்காகவும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கும் ‘ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலுக்கும்' இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. மேலும், இந்திய வானிலை ஆய்வு மையத்துணை இயக்குநரால் வருடாந்திர வானிலை அறிக்கை வெளியிடப்பட்டதோடு தினசரி வானிலை முன்னறிவிப்பு குறித்தும் அறிமுகம் செய்யப்பட்டது. பங்கேற்பு இப்பயிலரங்கில், கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைச் செயலாளர், பழனிசாமி, பொதுப் பணித் துறை அரசுச் செயலாளர்செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன், பேரிடர் மேலாண்மை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) காயத்ரி கிருஷ்ணன், தேசிய சுகாதார இயக்கம் இயக்குநர் அனீஷ் சேகர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநர் ஆஷா அஜித், மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadus-new-plan-to-combat-heatwaves-rs-50-crore-allocated-minister-sengottaiyan




