பாலிவுட் நடிகர் கோவிந்தாவிற்கு வேறு ஒரு டிவி நடிகையுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி சுனிதா அஹுஜா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதனை பொது இடங்களிலும், ரியாலிட்டி ஷோக்களிலும் சுனிதா தெரிவித்து வருகிறார். ஆனால் இக்குற்றச்சாட்டுக்களை கோவிந்தா பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. சமீபத்தில் கோவிந்தா தொடர்பு வைத்து இருப்பதாக கூறப்படும் டிவி நடிகையுடன் நடிகர் கோவிந்தா மும்பை விமான நிலையத்தில் தென்பட்டார். அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க இருக்கும் படத்தின் விளம்பரத்திற்காக ஒன்றாக சென்றதாக கோவிந்தா தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் விமான நிலையத்தில் ஒன்றாக தென்பட்டது குறித்து கோவிந்தாவின் மனைவி சுனிதா கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். கோமலுடன் நடிகர் கோவிந்தா அதில் தனது மகளின் வயது அளவுக்கு இளமையாக இருக்கும் ஒரு பெண்ணுடன் சுற்றிக்கொண்டிருக்கிறார் என்றும், இதற்காக அவர் கொஞ்சம் வெட்கப்பட வேண்டும் என்றும் கூறினார். இதற்கு கோவிந்தா விளக்கம் அளித்துள்ளார். எனது ஆதரவு தேவைப்படலாம் அவர் இது தொடர்பாக வெளியிட்ட வீடியோ பதிவில், சுனிதா தனது வேலையில் தலையிடுவதாகவும், தனது பொது இமேஜை சேதப்படுத்த முயன்றதாகவும், பொது கருத்துகளில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், அவர் தனது வரம்புகளுக்குள் இருக்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் அவருக்கு மீண்டும் எனது ஆதரவு தேவைப்படலாம் என்றும் கூறினார். தான் செய்யும் வேலை வீட்டை விட்டு வெளியே நடப்பதாகக் கூறிய அவர், அந்த வேலையில் சுனிதா தலையிடுவதாகக் குற்றம் சாட்டினார். தாங்கள் ஒரு புதிய திரைப்படத்தை தொடங்கியுள்ளதாகக் கூறிய கோவிந்தா, மக்கள் மத்தியில் தமக்குள்ள நற்பெயரைக் கெடுக்கவும், அவப்பெயரை ஏற்படுத்தவும், தமது தொழில் பாதிக்கப்படும் சூழலை உருவாக்கவும் சுனிதா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டினார். சுனிதாவிடம் திறமை, அதிகாரம், புகழ், மரியாதை மற்றும் செல்வம் ஆகியவை இருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், அதற்காகக் குறைவான வசதி கொண்டவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல என்றும் இது பார்ப்பதற்கு நன்றாக இல்லை," என்று அவர் கூறினார். சுனிதாவிற்கு பின்னணியில் பெரிய கும்பல்? இளம் நடிகையுடன் இணைந்து நடிப்பதாக சுனிதா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு கோவிந்தா அளித்த பதிலில், அவர் இக்கருத்தை மீண்டும் மீண்டும் எழுப்பி வருகிறார். நாட்டின் முன்னணி நடிகர்கள் அனைவரும் இளம் வயதுடைய நடிகைகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர். அந்த நடிகைகளுக்கு நல்ல திரைப்பட வாய்ப்புகள், பெயர், புகழ் மற்றும் மரியாதை கிடைக்கிறது. அதேவேளையில் நடிகர்களுக்கு இளையவர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைப்பதால் அவர்களும் இளமையாகத் தோற்றமளிப்பதாகவும் அவர் கூறினார். தான் இளமையாகத் தோற்றமளிக்கக் கூடாது என்று சுனிதா விரும்புகிறாரா என்று கேள்வி எழுப்பிய கோவிந்தா, அற்பமான எதிர்பார்ப்புகளுக்காக ஒரு பெரிய வணிக முயற்சியைப் பாதிக்கும் வகையில் அவர் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். சுனிதாவுக்குப் பின்னால் ஒரு கும்பல் செயல்படுகிறது. அது அனைவருக்கும் தெரிந்த விஷயம். காலப்போக்கில் இது வெளிப்படையாகத் தெரியவரும். அது அவருக்கும் நல்லதல்ல. தனது தொழில் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் அவருக்குத் எனது உதவி தேவைப்படலாம். அவர் வெளியிடும் கருத்துகளையும் முன்வைக்கப்படும் கோரிக்கைகளையும் மறுபரிசீலனை செய்யவேண்டும். தயவுசெய்து உங்கள் வரம்பிற்குள் இருங்கள்" என்று தெரிவித்தார். கோமல் ராணி ஸ்வர்ன்கர், கோவிந்தாவுடன் இணைந்து பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ள ஒரு புதுமுக நடிகை ஆவார். 'ரூபா' மற்றும் 'துனியா ஆகிய திரைப்படங்கள் மூலம் தான் மீண்டும் வெள்ளித்திரைக்குத் திரும்புவதாக அண்மையில் அறிவித்த கோவிந்தா, 'ரூபா' படத்தில் கோமல் ராணியை கதாநாயகியாக அறிமுகப்படுத்துகிறார். இத்திரைப்படங்களை கோவிந்தாவே தயாரிக்கவும் செய்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://cinema.vikatan.com/bollywood/stay-within-your-limits-you-might-need-my-help-actor-govinda-warns-his-wife-sunita




