சென்னை, சத்தியமூர்த்தி பவனை பற்றிக்குறை பேசவும், பெயர் மாற்ற சொல்லவும் உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? திமுகவிற்கு ரூபி ஆர். மனோகரன் கேள்வி. இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி ஆர்.மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- விரக்தியின் உச்சம் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் விரக்தியின் உச்சத்தில் நின்று பிதற்றி கொண்டிருக்கும் திமுகவும் அதன் செய்தித் தொடர்பாளர்களும் முதலில் தங்களின் கடந்த கால கொள்கை விளக்க குறிப்புகளைத் திறந்து பார்க்க வேண்டும். நிதர்சனமான உண்மை இ.பரந்தாமன், மூக்கு புடைப்பா இருந்தா இப்படித்தான் கண்மூடித்தனமா யோசிக்க தோணும் போல! பேசுவதற்கு முன்னாடி கொஞ்சம் ஆதாரங்களை எடுத்து உண்மை சரிபார்ப்பு பண்ணிட்டு வாங்க. 2022-2023, 2023-2024, 2024-2025 ஆகிய முந்தைய திமுக ஆட்சி காலங்களில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தாக்கல் செய்த அதிகாரப்பூர்வ கொள்கை விளக்க குறிப்புகளில் நேரு மற்றும் அம்பேத்கர் பெயர்கள் எங்குமே இடம்பெறவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. உங்கள் சமூக நீதி? அந்த காலகட்டத்தில் நீங்களும் சட்டமன்ற உறுப்பினராகத்தானே இருந்தீர்கள்? அப்போதெல்லாம் உங்கள் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் கொள்கை விளக்க குறிப்பை படிக்கும்போது அவையிலேயே தூங்கி கொண்டு இருந்தீர்களா? ஆட்சி அதிகாரத்தில் இருந்த பல வருடங்களாக அம்பேத்கர் பெயரையும், நேருவின் பெயரையும் கொள்கை விளக்க குறிப்பில் சேர்க்காமல் திட்டமிட்டுப் புறக்கணித்தீர்களா? அப்போது எங்கே போனது உங்கள் சமூக நீதி? அன்று நீங்களே சமூக நீதி வரலாற்றையே இருட்டடிப்பு செய்து, சமூக நீதியின் வேர்களையே வெட்டத் துணிந்துவிட்டு, இப்போது வந்து வெட்கம், மானம், ரோஷம் என்று பேசுகிறீர்களே. அதே கேள்வியை நான் இப்போது உங்களிடம் திருப்பிக் கேட்கிறேன்-இன்று இதையெல்லாம் பற்றிப் பேசும் உங்களுக்கு வெட்கம், மானம், ரோஷம், சொரணை எதுவும் துளியாவது இருக்கிறதா? கபட நாடகம் 2026 தேர்தல் நேரத்தில் மட்டும் திடீரென அரசியல் லாபத்திற்காகவும் கூட்டணி கணக்குகளுக்காகவும் மெய்யநாதன் மூலமாக பெயர்களை சேர்த்த உங்கள் கபட நாடகத்தை மக்கள் அறியாதவர்களா? இந்த முறை திமுகவில் உங்களுக்கு எம்.எல்.ஏ சீட் கூட கிடைக்காத விரக்தியா, இல்லை 'நல்லா கூவி பேசுனாத்தான் அடுத்த முறையாவது சீட் தருவோம்' என்று அறிவாலயம் சொல்லிவிட்டதா என்று தெரியவில்லை. அரசியல் நாடகம் சத்தியமூர்த்தி பவனை பற்றி குறை பேசவும், பெயர் மாற்றச் சொல்லவும் உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? அன்று நேருவையும் அம்பேத்கரையும் வசதியாக மறந்துவிட்டு, இன்று தேர்தல் தோல்வி பயத்தில் மட்டும் அவர்களை கையில் எடுக்கும் உங்கள் ‘அறிவாலயத்தின்’ பெயரை என்னவென்று மாற்ற போகிறீர்கள் என்று முதலில் சொல்லுங்கள். மக்கள் வழங்கிய புதிய மாற்றத்தை ஜீரணிக்க முடியாமல், சொந்த கட்சியின் இரட்டை வேடத்தை மறைத்துவிட்டு பிறர் மீது பழிபோடும் இந்த மலிவான அரசியல் நாடகம் இனியும் எடுபடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-has-what-right-to-criticise-and-rename-sathyamoorthi-bhavan-asks-ruby-r-manoharan




