புதுச்சேரி, புதுச்சேரி முதலியார்பேட்டை சிங்கிலி நாயக்கர் தெருவில் பாழடைந்த வீடு ஒன்று உள்ளது. அங்குள்ள ஒரு அறையில் பெண்களின் பிரா, பாவாடை, ஜட்டி உள்ளிட்ட உள்ளாடைகள் சிதறி கிடந்தன. மேலும் சில உள்ளாடைகள் சுவற்றில் தொங்க விடப்பட்டு இருந்தது. அந்த உள்ளாடைகள் அனைத்தும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் துவைத்து கொடிகளில் காயப்போட்டவை ஆகும். அவற்றை மர்ம நபர் திருடி அந்த அறையில் வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், சமூக விரோதிகள் சிலர் உள்ளாடைகளை திருடும் செயலில் ஈடுபட் டிருப்பதாகவும், அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் பெண்களின் உள்ளாடைகளை திருடியது உடையார்தோட்டம் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்த வேணு (வயது 44) என்பது தெரியவந்தது. அவரை முதலியார்பேட்டை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வேணு டெய்லரிங் வேலை செய்து வந்ததும், கடந்த 7 ஆண்டுக்கு முன்பு மனைவி பிரிந்து சென்று விட்டதும், அதன் பின்னர் அவர் கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. எப்போதும் மதுபோதையில் இருக்கும் அவர், பெண்களின் உள்ளாடையை திருடி, அதன் மீது மது மயக்கத்தில் மெத்தை போலபடுத்து உல்லாசமாக உறங்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார். கைதான வேணுவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/tailor-arrested-for-stealing-womens-undergarments-and-sleeping-with-them




