சென்னை, தென்னிந்திய சினிமாவில் கவனம் ஈர்த்து வரும் இளம் நடிகைகளில் ஒருவரான மமிதா பைஜு, தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் விஜய்யுடன் 'ஜனநாயகன்', சூர்யாவுடன் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்', விஷ்ணு விஷாலுடன் 'ரெண்டு வானம்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், தற்போது பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் தனி ரசிகர் பட்டாளம் திரைப்படங்களுடன் சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கி வந்த மமிதா பைஜுவுக்கு, இன்ஸ்டாகிராமில் மட்டும் 52 லட்சத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர். தனது படங்கள், புகைப்படங்கள் மற்றும் அன்றாட நிகழ்வுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வந்த அவர், இளம் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். சோஷியல் மீடியாவுக்கு 'குட்பை'? இந்த நிலையில், அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் விலக உள்ளதாக மமிதா பைஜு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக இருப்பதாலும், சமூக வலைதளங்களில் எழும் தேவையற்ற விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளைத் தவிர்க்கும் நோக்கிலும் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/shock-for-fans-is-mamitha-baiju-quitting-social-media




