கீவ் ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உயிர் தப்பினார். ரஷியா மற்றும் உக்ரைன் இடையே தீவிர மோதல் நடந்து வரும் சூழலில், உக்ரைன் மற்றும் போலந்து நாட்டு எல்லை பகுதியருகே உள்ள ரெயில்வே கிராசிங் பகுதியில் ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. இதனை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த ரெயில் ஒன்றை அதிகாரிகள் நிறுத்தினர். சிறப்பு ரெயில் அந்த ரெயிலில், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்மன் அதிபர் பிரெட்ரிக் மெர்சின் ஆலோசகர் கன்தர் சாவ்டர், சுவீடனின் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட், ஐரோப்பிய பாதுகாப்பு ஆலோசகர், தூதர்கள் மற்றும் ஜெர்மன் நாட்டு எம்.பி.க்கள் அந்த வழியே சிறப்பு ரெயிலில் பயணித்து கொண்டிருந்தனர். டிரோன் எச்சரிக்கையையொட்டி, அதிகாரிகள் ரெயில் பயணிகளை எழுப்பி உடனடியாக வெளியேற்றினர். இதனால், அச்சத்தில் அவர்கள் ரெயிலில் இருந்து தப்பியோடினர். அந்த சூழலில், டிரோன் தாக்குதல் ஒன்றும் நடந்துள்ளது. இந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன. இந்த சம்பவத்தில் அதிகாரிகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் ஐரோப்பிய உயரதிகாரிகள் உயிர் தப்பினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/russia-drone-attack-former-uk-pm-survives




