கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் விஜய் எழுதியுள்ளதாவது. கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் ஏன் முக்கியமானது? "தமிழ்நாடு மாநிலம் இயல்பாகவே மேற்பரப்புநீர் வளங்களில் பற்றாக்குறை கொண்டதாகவும், தனது நீர்த் தேவைகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமான அளவிற்கு அண்டை மாநிலங்களைச் சார்ந்தே உள்ளது. கோதாவரி - காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம்TASMAC: `ஆன்லைனில் பேமென்ட் தான் செய்ய முடியும்; கடைகளில் தான் டெலிவரி' - அமைச்சர் விக்னேஷ் விளக்கம் மாநில அரசினால் தொடர்ச்சியான ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும், நிலத்தடி நீர் வளமும் கவலைக்கிடமான கட்டத்தை எட்டும் அளவிற்குப் பயன்படுத்தப்பட்டு, பல பகுதிகளில் அது அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படும் நிலை தொடர்கிறது. தமிழ்நாட்டின் மேற்பரப்புநீர் வளங்களைப் பெருக்குவதற்கான மிக முக்கியமான நீண்டகால வாய்ப்பாக கோதாவரி காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் திகழ்கிறது. தமிழ்நாட்டு மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கான அதிகரித்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு இத்திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். விரிவான திட்ட அறிக்கை தயார் மேலும், தமிழ்நாட்டில் குறிப்பாக தென் மாவட்டங்களான, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகியவைத் தொடர்ந்து கடுமையான நீர்ப் பற்றாக்குறையுடனும், வறட்சியாலும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளன. அம்மாவட்டங்களின் அதிகரித்துவரும் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மிகச்சிறந்த நிரந்தரமானத் தீர்வாக கோதாவரி - காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது அவசியம். இத்திட்டத்தினால் வெள்ள உபரிநீரை நீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்குத் திருப்பிவிட வழிவகுப்பதாய் அமையும். விவசாயம்வேளாண் பட்ஜெட்: "பழைய பட்ஜெட் புத்தகத்தையே திருப்பி வாசித்திருக்கின்றனர்" - MRK பன்னீர்செல்வம் இப்பெரிய திட்டத்தின் முதற்கட்டமாக, NWDA, கோதாவரி - பெண்ணாறு பாலாறு வெள்ளாறு இணைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரித்துள்ளது. இத்திட்டத்தினால் தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்குப் பயனளிக்கும் என்றாலும், தற்போது தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கையில் உள்ள சீரமைப்பு வழியானது, காவிரி ஆற்றுக்குச் சில கிலோமீட்டர் முன்னதாகவே முடிவதால் அதற்குப் பதிலாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கோதாவரி காவிரி குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துக்கொள்ளுங்கள். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் - அந்தஸ்து வேண்டும் ஆகவே, தேசிய நலனைக் கருத்தில்கொண்டு, ஆக்கப்பூர்வமான கலந்தாலோசனை மற்றும் கூட்டுறவுச் கூட்டாட்சித் தத்துவத்தின் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான கருத்துவேறுபாடுகளைத் தீர்த்து இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்பதில் தாம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளேன். இத்திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் சமூகப்பொருளாதார நன்மைகளைக் கருத்தில்கொண்டு, கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக (fast-track) செயல்படுத்திட, அதற்கு "தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்" என்ற அந்தஸ்தை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். விஜய்'கடைகளில் UPI பயன்படுத்தி பணம் செலுத்துகிறீர்களா?' - அதற்கு இனி மத்திய அரசு கட்டணம் வசூலிக்கலாம் ஒருங்கிணைந்து செயல்படுத்துதல், உத்திரவாதமான நிதி ஒதுக்கீடு மற்றும் குறித்த காலத்தில் திட்டத்தை முடிப்பது ஆகிய நோக்கத்திற்காக ஒன்றிய அரசு மற்றும் பயன்பெறும் மாநிலங்களின் பங்கேற்புடன் ஒரு பிரத்யேக 'சிறப்பு நோக்கு அமைப்பை' (Special Purpose Vehicle) உருவாக்குவது குறித்தும் பரிசீலிக்கலாம் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவதால் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் மிகவும் பயனளிக்கும். தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்தை விரைவாகவும் வெற்றிகரமாகவும் செயல்படுத்துவதற்குத் தேவையான முழு அர்ப்பணிப்புடன் அனைத்து ஒத்துழைப்பும் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. எனவே, ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கும் தேசிய நீர் மேம்பாட்டு முகமைக்கும் (NWDA) பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களை வலியுறுத்தியுள்ளார். 1. தொடர்புடைய ஆலோனைகளை பயன்பெறும் மாநிலங்களுடன் விரைவுபடுத்தி, நிலுவையில் உள்ள பிரச்சினைகளில் விரைவான உடன்பாட்டை ஏற்படுத்த வேண்டும்; 2. காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கட்டளைக் கதவணை வரை இந்த இணைப்பை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) இறுதி செய்யவேண்டும்; 3. இத்திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து, முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக விரைவான முறையில் (Track Method) அமல்படுத்த நடவடிக்கை எடுத்தல்; மற்றும் பிரதமர் மோடி"காவிரிக்காக 22 நாள்கள் நாடாளுமன்றத்தை முடக்கினோம் நாங்கள்; ஆனால் இந்த அரசு."- எடப்பாடி பழனிசாமி 4. இத்திட்டத்தை ஒருங்கிணைந்த மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்திட ஒரு சிறப்பு நோக்கு அமைப்பை நிறுவுவது குறித்துப் பரிசீலிப்பது மற்றும் இத்திட்டத்தைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவித்தல். இத்திட்டம் தொடர்பாக மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் தனிப்பட்ட கவனம் செலுத்தி, தென்னிந்தியாவின் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு நீண்டகால நீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், நமது சிறப்பான நீர் வளங்களைச் சமமாகவும் நிலையான முறையிலும் பயன்படுத்துவது என்ற தேசிய குறிக்கோளை முன்னோக்கி எடுத்துச்செல்வதற்கும் கணிசமான வழங்குங்கள்". முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/cm-vijay-urges-pm-modi-to-fast-track-godavari-cauvery-link




