கோத்தகிரி, ஈளாடா தடுப்பணையில் வேகமாக குறைந்து வரும் தண்ணீரினால் கோத்தகிரியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதி ஊற்று நீர்நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகராட்சிக்கு சொந்தமான முக்கிய தடுப்பணை, கோடநாடு அருகே உள்ள ஈளாடா கிராம பகுதியில் அமைந்துள்ளது. இந்த தடுப்பணையானது சுமார் 90 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும் கொண்டது. மேலும், இதன் ஆழம் சராசரியாக 8 அடி முதல் 12 அடி வரை இருக்கும். சுத்திகரிப்பு நிலையம் இங்கு தேக்கப்படும் தண்ணீரானது, குழாய்கள் மூலம் சக்திமலை பகுதியில் அமைந்துள்ள நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு தண்ணீர் முழுமையாக சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.பின்னர், இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கோத்தகிரி நேரு பூங்கா அருகே அமைந்துள்ள நீர் உந்து நிலைய தொட்டிகளுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு தேக்கி வைக்கப்படுகிறது. அங்கிருந்து குழாய்கள் மூலமாக நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரூ.43 கோடியில் அம்ருத் 2.0 திட்டம் ஈளாடா மற்றும் அளக்கரை கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், ‘அம்ருத் 2.0’குடிநீர் விநியோக மேம்பாட்டுத் திட்டம் தயார் செய்யப்பட்டது. தற்போது இந்த திட்டத்திற்காக மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் ரூ.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான குழாய்கள் பதிக்கும் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் கவலை இந்த தடுப்பணை நீரை நம்பி அப்பகுதி விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.இங்குள்ள தண்ணீரை நம்பி, சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கேரட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு தீவிரமாக விவசாயம் செய்து வருகின்றனர். நீர்மட்டம் மளமளவென சரிந்தது கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோடநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதனால் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அது முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. உபரிநீரும் பெருக்கெடுத்து வெளியேறியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாமல் ஏமாற்றியது. இதனால் தடுப்பணைக்கு வரும் நீர்வரத்து வெகுவாக குறைந்தது. அதேநேரம், தடுப்பணையில் இருந்து குடிநீர் விநியோகத்திற்காக தொடர்ந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வந்ததால், நீர்மட்டம் மளமளவென சரிந்து தற்போது வெறும் 7 அடியாக குறைந்து விட்டது. அளக்கரை குடிநீர் திட்டம் இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கோத்தகிரி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஈளாடா தடுப்பணை நீரை மட்டும் நம்பி இருக்காமல், அளக்கரை திட்டத்தின் கீழும் குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் குடிநீர் தட்டுபாடு ஏற்படாது என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/water-level-falls-fast-in-ealada-dam-kothagiri-faces-drinking-water-crisis-risk




