சென்னை, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகையை திருடி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். ரெயில் பயணம் சென்னை வேப்பெரி பகுதியைச் சேர்ந்தவர் தீபக் சஞ்செட்டி (வயது 32). அவர் சென்னை தியாகராய நகரில் உள்ள ‘மணி ஜூவல்லர்ஸ்’ நகைக்கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் கடந்த ஜூலை 23-ந்தேதி இரவு மதுரை வழியாக சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணித்தார். மேலும், கையில் 3 கோடி ரூபாய் மதுப்புள்ள வைர நகைகளுடன் தீபக் முதல் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் ஏ 43 இருக்கையில் பயணித்தார். கொள்ளை அனந்தபுரி எக்ஸ்பிரஸ், திருச்சி ரெயில் நிலையத்தை அடைந்த போது தீபக் சஞ்செட்டி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து கண்விழித்துப் பார்த்தபோது 3 கோடி ரூபாய் வைரம் வைத்திருந்த தோல் பை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்சி ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசில் புகார் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கிழிந்த நிலையில் உள்ள ஒரு தோல் மற்றும் அதற்குள் ஸ்மார்ட் வாட்ச் ஒன்று கல்லகம் ரெயில் நிலையத்தில் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனந்தபுரி ரெயிலில் முதல் வகுப்பில் பயணித்த பட்டியலை போலீசார் ஆய்வு செய்தனர். அதே பெட்டியில் பயணித்த 2 பேர் ரெயிலில் இருந்து பாதியில் இறங்கிய காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தன. இதையடுத்து அந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அந்த 2 பேரும் மதுரை ரெயில் நிலையத்திலிருந்து தீபக் சஞ்செட்டியை பின் தொடர்ந்தது தெரியவந்தது. 2 பேர் கைது ரெயில்வே போலீசார் அவர்களின் முகத்தோற்றத்தை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிய வைத்தனர். பின்னர் ஒரு வாரப் போராட்டத்திற்கு பிறகு சிற்குரி அம்மானில் குற்றவாளிகளான பாட்னா மாநகராட்சி கவுன்சிலர் மகனான ராஜன்குமார் மற்றும் அவரது நண்பரான அமர்நாத் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணை அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே ரெயிலில் ஏ42 இருக்கையில் பயணித்த அமர்நாத் தோல் பையை கொள்ளையடித்து அவரது நண்பர் ராஜன்குமாரிடம் கொடுத்தது தெரியவந்தது. மேலும், சென்னை வந்த 2 பேரும் சவுகார் பேட்டையில் உள்ள நகை கடையில் நகையின் மதிப்பை பற்றி கேட்டறிந்தனர். பின்னர் சென்னையில் இருந்து மும்பை செல்வதற்கு முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்து, தக்கல் மூலமாக மீண்டும் டிக்கெட்டை பதிவு செய்து மும்பை சென்ற விவரங்கள் தெரிய வந்தது. இது போன்ற சம்பவங்கள் ரெயிலில் தொடர்ந்து நடைபெறுகின்றன. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/diamond-jewelry-worth-3-crore-stolen-on-train-2-arrested




