சென்னை, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 17-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. சிறப்பு பஸ்கள் அதன்படி, நாளை (புதன்கிழமை) சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து மதுரைக்கு 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் மதுரைக்கு இயக்கப்படுகிறது. அதன்படி, கோவையில் இருந்து 30, திருப்பூர் 30, ராமநாதபுரம் 30. அருப்புக்கோட்டை25, சிவகாசி 30, ராஜபாளையம் 30, விருதுநகர் 10, தேனி 30, திண்டுக்கல் 20 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும், மதுரை மாநகரப் பகுதியில், திருமங்கலம், மேலூர், திருப்புவனம், வாடிப்பட்டி, நத்தம், பூவந்தி மற்றும் உசிலம்பட்டி ஆகிய இடங்களில் இருந்து தலா 20 பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது. இந்த தகவல், போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/announcement-of-50-special-buses-to-madurai-for-the-consecration-of-meenakshi-amman-temple




