விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10 செப்டம்பர் 6ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகிறது. நிகழ்ச்சி தொடங்கி பத்தாவது ஆண்டு என்பதால் இந்த வருடம் புதிய முயற்சியாக தொடர்ந்து பிக்பாஸ் பார்த்து வரும் ரசிகர்களில் சிலரை நிகழ்ச்சிக்குள் அனுப்பும் விதமாக பிக்பாஸ் தி காமன் மேன் என்ற நிகழ்ச்சி ஒன்றும் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த காமன் மேன் நிகழ்ச்சியிலிருந்து மூன்று பேர் பிக்பாஸ் சீசன் 10 ல் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்களென கூறப்படுகிறது. இந்த வருடம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாமென எதிர்பார்க்கப்படும் போட்டியாளர்கள் என பலரது பெயர்கள் சமூக வலைதளங்களில் அடிபட்டு வருகின்றன. விகடன் தளத்திலும் எதிர்பார்க்கப்படும் போட்டியாளர்கள் என சிலரது பெயர்கள் வெளியானது நினைவிருக்கலாம். இந்தச் சூழலில் தற்போது மேலும் இரண்டு போட்டியாளர்கள் குறித்த விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. ஆல்யா மானசா |Alya Manasa ஹிட் சீரியல் ஹீரோயின்! சீரியல் நடிகை ஆல்யா மானசா பிக்பாஸ் சீசன் 10 ல் ஒரு போட்டியாளராகச் செல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான ஆல்யா அந்த தொடரில் ஹீரோவாக நடித்த சஞ்சீவைத் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஐலா, அர்ஷ் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஆல்யா பெயர் மட்டுமே அடிபடுகிறது. அவரது கணவர் பெயர் இப்போதைக்கு இல்லை என்கிறார்கள். ‘முரளி விஜய் முதல்முறையாக விளையாட்டு வீரர்! பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறையாக கிரிக்கெட் வீரர் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாமென எதிர்பார்க்கப் படுகிறது. அவர் முரளி விஜய். தமிழ்நாடு அணிக்காகவும் ஐ.பி.எல் லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் ஆடியிருக்கிறார் இவர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://cinema.vikatan.com/television/serial-actress-alya-manasa-cricketer-murali-vijay-may-enter-biggboss-tamil-10




