சமீபகாலமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட முக்கிய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் தங்கள் பணிகளை ராஜினாமா செய்துவிட்டும், விருப்ப ஓய்வு பெற்றும் தனியார் விண்வெளி நிறுவனங்களில் இணைந்து வருகின்றனர். இஸ்ரோ இஸ்ரோவில் இருந்து வெளியேறும் விஞ்ஞானிகள். இந்தியாவின் மிக முக்கிய திட்டங்களான 'ககன்யான்' போன்ற திட்டங்களில் பணியாற்றும் முக்கிய வல்லுநர்கள் வெளியேறுவது விண்வெளித் துறைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இதனைத் தடுக்க இந்திய விண்வெளித் துறை அவசர நடவடிக்கையாக, முக்கிய திட்டங்களில் பணிபுரியும் விஞ்ஞானிகளின் ராஜினாமா ஒப்புதல் அதிகாரத்தை மையப்படுத்தி, கட்டுப்பாடுகளைப் பலப்படுத்தி இருக்கிறது. காரணம் என்ன? விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கவும், ஒழுங்குபடுத்தவும் கடந்த 2020-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் 'IN-SPACe' என்ற அமைப்பை உருவாக்கியது. அதன் பிறகு 'Skyroot Aerospace', 'Agnikul Cosmos', 'Pixxel'மற்றும் 'Bellatrix Aerospace' போன்ற ஏராளமான விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிவேகமாக வளர்ந்து வருகின்றன. சமீபத்தில் கூட ஹைதராபாத்தைச் சேர்ந்த Skyroot Aerospace என்ற தனியார் நிறுவனம் தனது முதல் Orbital ராக்கெட்டான 'விக்ரம்-1' விண்ணில் செலுத்தி சாதனைப் படைத்திருந்தது. இஸ்ரோ அங்கீகாரம் தனியார் நிறுவனங்கள் சந்தைப் போட்டிக்கு ஏற்ப முன்னணி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் சுதந்திரத்தையும், விரைவான முடிவெடுக்கும் சூழலையும் அளிக்கின்றன. அரசு சேவை விதிகளுக்குட்பட்டு இயங்கும் இஸ்ரோவில் பதவி உயர்வுகளும் பொறுப்புகளும் சீனியாரிட்டி அடிப்படையில் தீர்மானிக்கப்படும் வேளையில், தனியார் நிறுவனங்கள் திறமைக்கு உடனடியாக அங்கீகாரமும், தலைமைப் பொறுப்புகளையும் வழங்குகின்றன. தனியார் நிறுவனங்கள் நோக்கி. மேலும் அரசு நிர்ணயிக்கும் சம்பளத்தை விட பல மடங்கு கூடுதல் ஊதியத்தையும், நிறுவனப் பங்குகளையும் கொடுக்கின்றன. தவிர ஒரு திட்டத்தைச் செயல்படுத்த அரசு அமைப்புகளில் தேவைப்படும் பல்வேறு கட்ட அனுமதி நடைமுறைகள் மற்றும் அதிகாரத்துவத் தாமதங்கள் இல்லாத சூழல், புதுமையான விஷயங்களை வேகமாகக் கண்டறிய விரும்பும் விஞ்ஞானிகளையும், பொறியாளர்களைத் தனியார் நிறுவனங்கள் நோக்கி ஈர்க்கிறது. NASA 40 ஆண்டுகளுக்கு முன்பு NASA எப்படி சவால்களை சமாளித்தது? சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க விண்வெளி அமைப்பான 'நாசா' (NASA) இதே போன்ற திறமையாளர்கள் தனியார் துறைக்குச் செல்லும் சூழலை எதிர்கொண்டது. ஆனால், நாசா தன் விஞ்ஞானிகளை அமைப்பை விட்டு வெளியேற விடாமல் தடுக்கக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்காமல், முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையைக் கையாண்டது. தனியார் நிறுவனங்களைத் தன் ஊழியர்களைப் பறிக்கும் போட்டியாளர்களாகப் பார்க்காமல், நாட்டின் விண்வெளிப் பொருளாதாரத்தை உயர்த்தும் கூட்டாளிகளாக அங்கீகரித்தது. இதன் மூலம், நாசாவில் பயிற்சி பெற்ற திறமைமிக்க பொறியாளர்கள் 'SpaceX', 'Blue Origin' மற்றும் 'Rocket Lab' போன்ற நிறுவனங்களுக்குச் சென்று அங்குள்ள விண்வெளித் தொழில்நுட்பங்களை விரைவாக வளர்க்க முடிந்தது. நாசாவின் திட்டம்! பின்னர் அந்தத் தனியார் நிறுவனங்களின் ராக்கெட்டுகள் மற்றும் விண்கலன்களையே நாசா வணிக ரீதியாகக் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தத் தொடங்கியது. இதனால் நாசா ராக்கெட்டுகளை சொந்தமாகத் தயாரிக்கும் வழக்கமான உற்பத்திப் பணிகளில் இருந்து விலகி, செவ்வாய் கிரக ஆராய்ச்சி மற்றும் ஆழமான விண்வெளி ஆய்வுகள் போன்ற புதிய எல்லைகளை நோக்கித் தன் கவனத்தையும் நிதியையும் திருப்ப முடிந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகளைக் கட்டுப்பாடுகளால் தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக, நாசா செய்தது போல இஸ்ரோவும் தனியாருக்குத் தேவையான வசதிகளையும் ஒப்பந்தங்களையும் வழங்கி, சேர்ந்து பணியாற்ற வேண்டும். அதுவே இந்தச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வாகும் என மூத்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/science/why-scientists-are-leaving-isro




