திருவண்ணாமலை, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இதில் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும். சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அவ்வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை 5 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார்-உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சாமி தரிசனம் கோபுரம் அருகில் அமைக்கப்பட்டு உள்ள காத்திருப்பு கூடத்தின் வழியாகவும் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். ராஜகோபுரத்தின் வழியாக தரிசனத்திற்கு சென்ற பக்தர்களின் வரிசையானது வட ஒத்தவாடை தெருவில் நீண்டு காணப்பட்டது. மேலும் அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயிலுக்கு அருகில் உள்ள காத்திருப்பு கூடத்தில் பக்தர்கள் காத்திருந்து நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 2 மணி நேரம் ஆனதாக தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/devotional/a-crowd-of-devotees-gathered-at-the-annamalaiyar-temple-in-tiruvannamalai-waited-for-2-hours-to-have-darshan-of-the-deity




