தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று (செப்.15) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், "ஊழல் லஞ்சம், கலெக்ஷன், கமிஷன் இல்லாத ஆட்சியை தவெக நடத்துகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படி ஒரு ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. வீரபாண்டியன், பெ.சண்முகம் இந்த ஆட்சி நடைபெறுவதற்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது இடதுசாரி கட்சிகள். நாங்கள் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறோம். எங்கள் அமைச்சர்கள் நேர்மையாக இருக்கிறார்கள். எல்லா அமைச்சர்களும் நேர்மையாக இருக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தலில் ஆதரவு தந்த இடதுசாரி கட்சிகள் இப்போது தனித்து நிற்க முடிவு எடுத்தது என்னைப் போன்றவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. தங்கள் முடிவை இடதுசாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆனால் அதனை அவர்கள் செய்ய மாட்டார்கள். முடிவு எடுத்த பிறகு மறுபரிசீலனை செய்ய வாய்ப்பில்லை. அவர்களின் இந்த முடிவை நாம் கனத்த இதயத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்" என்று பேசியிருக்கிறார் மாணிக்கம் தாகூர். "சினிமாவில் நடித்தவர் இப்போது மக்கள் முன் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்"- விஜய் குறித்து டிடிவி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/manikam-tagore-about-cpi-cpm-statement-of-byelection




