பெங்களூரு, துலீப் டிரோபியில் மிக குறைந்த வயதில் கேப்டன் பொறுப்பேற்ற வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்சி படைத்துள்ளார். துலீப் டிரோபி பெங்களூருவில் நடந்து வரும் துலீப் டிரோபி அரையிறுதிப் போட்டியில் மத்திய மண்டல - கிழக்கு மண்டல அணிகள் விளையாடி வருகின்றன. இதில் கிழக்கு மண்டல அணியின் கேப்டனாக இஷான் கிஷன் செயல்பட்டு வந்தார். இதற்கிடையில், மத்திய மண்டல அணியின் முதல் இன்னிங்ஸின் 19-வது ஓவரின்போது விக்கெட் கீப்பிங் செய்த இஷான் கிஷனுக்கு எதிர்பாராதவிதமாக வலது மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. 15 வயதில் கேப்டன் இதனால் அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். இதையடுத்து அவரது விக்கெட் கீப்பிங் பொறுப்பை குமார் குஷாக்ரா ஏற்க கேப்டன் பொறுப்பு 15 வயதான வைபவ் சூர்யவன்ஷியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் துலீப் டிரோபி வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். அணியின் மிகக் குறைந்த வயது வீரராக இருந்தபோதிலும், அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை சரியாகப் பயன்படுத்தி தனது தலைமைப் பண்பை வைபவ் சூர்யவன்ஷி வெளிப்படுத்தினார். 266 ரன்களுக்கு ஆல்-அவுட் மத்திய மண்டல அணியின் முதல் இன்னிங்ஸில் கிழக்கு மண்டல அணி சிறப்பாக பந்துவீசி, அந்த அணியை 266 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/captain-at-15-vaibhav-suryavanshi-makes-history




