மும்பை, டீசல் விலை, பராமரிப்பு செலவு உயர்வு காரணமாக இன்று (ஜூலை 18) முதல் பேருந்து கட்டணம் 13.56 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. நாட்டிலேயே மிகப்பெரிய பொது போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக மராட்டிய மாநில சாலை போக்குவரத்து கழகம் விளங்குகிறது. பஸ் கட்டணம் உயர்வு எம்.எஸ்.ஆர்.டி.சி. என அழைக்கப்படும் இந்த போக்குவரத்து கழகம் வசம் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் 55 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்கிறார்கள். இந்தநிலையில் மாநில அரசு பஸ் கட்டணத்தை 13.56 சதவீதம் உயர்த்துவதற்கு மாநில போக்குவரத்து ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு 12 மணி முதல் உடனடியாக அமலுக்கு வந்தது. இந்த தகவலை அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். டீசல் விலை, பராமரிப்பு செலவு உயர்வு டீசல் விலை, பராமரிப்பு செலவு உயர்வு காரணமாக இன்று (ஜூலை 18) முதல் பேருந்து கட்டணம் 13.56 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதன்படி முக்கிய நகரங்களுக்கு இடையிலான வழித்தடங்களில் பயணச்சீட்டு விலைகள் அதிகரித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/effective-today-government-bus-fare-hike




