நாடு முழுவதும் இணையதள மோசடிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த மோசடியில் அதிக அளவில் பெண்கள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இது போன்ற மோசடிகள் அதிக அளவில் நடக்கிறது. குஜராத்தில் 11-ஆம் வகுப்பிற்குப் பிறகு படிப்பை பாதியில் நிறுத்திய ரோஹித் விரேந்திரசிங் ஷக்யா என்ற வாலிபர் நாடு முழுவதும் நடக்கும் இணைய மோசடிகளுக்கு தேவையான போலி மொபைல் செயலிகளை உருவாக்கி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் டெலிகிராம் ஆகியவற்றைப் பயன்படுத்தி போலியான வங்கி மற்றும் அரசு சார்ந்த மொபைல் செயலிகளை உருவாக்கி, இந்தியா முழுவதும் இணையத்தள மோசடி கும்பல்களுக்கு அதனை விற்பனை செய்துள்ளார். வெளிச்சத்திற்கு வந்தது எப்படி? கடந்த மே மாதம் சூரத்தை சேர்ந்த ஒருவர் இணைய மோசடி மூலம் ரூ.6 லட்சத்தை இழந்தார். மே 15 மற்றும் 18-க்கு இடைப்பட்ட காலத்தில், பாதிக்கப்பட்டவருக்கு வாட்ஸ்அப் வழியாக "PNB One.apk" என்ற போலி கோப்பு (file) ஒன்று வந்தது. அது பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரப்பூர்வ செயலி என்று நம்பி, அவர் அதைத் தனது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்தார். உடனே இணையக் குற்றவாளிகள் அவரது வங்கி விவரங்களை அணுகி, அவரது பிரைம் கூட்டுறவு வங்கி கணக்கிலிருந்து யூனியன் வங்கி கணக்கிற்கு ரூ. 5 லட்சத்தை மாற்றினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் ரோஹித் பிடிபட்டார். சூரத் நகர சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினர் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து கைது செய்தனர். அவனிடம் விசாரித்தபோது, 16-வது வயதிலேயே சிறந்த 'கோடர்' (coder) ஆகத் திகழ்ந்தார் என்று தெரிய வந்தது. வங்கிகள் மற்றும் அரசின் உண்மையான செயலிகளைப் போலவே தோற்றமளிக்கும் போலி செயலிகளை உருவாக்க அவர் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளையும் டெலிகிராம் சேனல்களையும் பயன்படுத்தினார். அவ்வாறு உருவாக்கப்பட்ட அந்த APK கோப்புகளை இணையக் குற்றவாளிகளுக்கு மாதம் 15,000 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தார். அந்த போலி மொபைல் செயலிகளை பயன்படுத்தி இணைய மோசடி கும்பல் நாடு முழுவதும் 64 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தைக் மோசடி செய்துள்ளனர்.சைபர் மோசடிக்கு முக்கிய காரணமான ரோஹித் ஜார்க்கண்ட், அரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சைபர் மோசடி கும்பல்களுக்கு மொபைல் போன்களில் பணத்தை அபகரிக்க பயன்படும் APK கோப்புகளை உருவாக்கி விற்பனை செய்துள்ளார். ரோஹித் இரண்டு வகையான செயலிகளை உருவாக்கியுள்ளார். அதில் ஒன்று, பயனர்கள் தங்கள் மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்யும் 'பாதிக்கப்பட்டவர் செயலி' (victim app), மற்றொன்று, மோசடி செய்பவர்கள் OTP-கள், வங்கிச் சான்றுகள் மற்றும் பிற முக்கியத் தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள உதவும் நிர்வாகி செயலி' (admin app). ஆகும். இந்த போலியான செயலிகள், SBI, PNB, Axis Bank, UCO Bank, ICICI Bank, Union Bank, BigBasket, American Express, ஆதார் சேவைகள், PM Kisan மற்றும் RTO அபராதத் தொகை செலுத்தும் இணையதளங்கள் உள்ளிட்ட பல நம்பகமான நிறுவனங்கள் மற்றும் சேவைகளைப் போலத் தோற்றமளித்தன. போலீஸார் ரோஹித்தின் மொபைல் போன் மற்றும் லேப்டாப்களை ஆய்வு செய்தபோது அவர் 121 போலி APK செயலிகளை உருவாக்கியதும், அவை நாடு முழுவதும் 21,672 மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/crime/college-dropout-arrested-for-creating-and-selling-fake-banking-mobile-apps-for-15000




