சென்னை, கடந்த 1-ம் தேதி குறைந்து விற்பனை செய்யப்பட்ட தங்கம் விலை நேற்று சற்று அதிகரித்து காணப்பட்டது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதே போல் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,250-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய தங்கம் விலை இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.400 குறைந்து ரூ.1,05,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை சென்னையில் வெள்ளி விலை 7-வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-by-rs-400-per-sovereign-2




