அமித்ஷாவின் பெயரை கேட்டால் பயங்கரவாதிகளே நடுங்குவார்கள் என நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ பேசினார். அடிக்கடி ஒத்திவைப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாளிலி ருந்தே எதிர்க்கட்சிகளின் அமளியால் தினமும் அடிக்கடி ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றும் சில முறை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே மக்களவையில் நேற்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன மேம்பாட்டு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றத்துக்கு பிறகு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ எதிர்க்கட்சியினரை பார்த்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அரசாங்கமே தீர்மானிக்கிறது காலை முதல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்துறை மந்திரியின் பெயரில் முழக்கங்களை எழுப்பி வருகிறார்கள். நான் ஒரு விஷயத்தை மிகத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். உள்துறை மந்திரி அமித்ஷா என்பவர் சாதாரணமானவர் அல்ல. அவருடைய பெயரைக் கேட்டாலே அனைத்து பயங்கரவாதிகளும் நடுங்குவர். அவர் இங்கே பதில் அளிக்க வரும்போது உங்களால் அதை கேட்கவே முடியாது. விதிகளின்படி, மந்திரி இங்கே வர வேண் டும் என்று நீங்கள் கோர முடியாது. எந்த மந்திரி வரவேண்டும்?, யார் பதிலளிக்க வேண்டும்? என்பதை அரசாங்கமே தீர்மானிக்கிறது. உகந்தவை அல்ல எனவே, அவைக்கு இடையூறு விளைவிப்பதையும், நாட்டைத் தவறாக வழிநடத்துவதையும் நீங்கள் நிறுத்த வேண்டும். அவையில் இதுபோன்ற போராட்டங்கள் நமது குடியரசுக்கும், நமது ஜனநாயகத்துக்கும் உகந்தவை அல்ல. இவ்வாறு அவர் கூறினார். இதே கருத்தை கிரண் ரிஜிஜூ மாநிலங்களவையிலும் தெரிவித்தார். காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா “ 'ஜென்-சி' இளைஞர்களுக்கு மோகன் பகவத்திடமிருந்து சான்றிதழ் தேவையில்லை. நாடாளுமன்ற கூட்டத்திற்கு வர மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பயப்படுகிறார். அவர் வந்து ஒரு அறிக்கை கொடுக்க வேண்டும். அதில் என்ன பிரச்சினை? ஏதோ தவறு நடந்துள்ளது. எனவே பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் ” என்றது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/even-terrorists-tremble-at-the-mention-of-amitshahs-name-union-minister-kiren-rijiju




