சென்னை, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'கருப்பு' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். ஆக்ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்தில் உருவான இப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் பிஸி 'கருப்பு' படத்தைத் தொடர்ந்து, 'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார். சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை நாக வம்சி தயாரித்துள்ளார். இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதையடுத்து, இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கும் 'சூர்யா 47' படத்தில் சூர்யா நடித்து வருகிறார். மேலும், இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் தனது 48-வது படத்திலும் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரூ.100 கோடியாக உயர்ந்ததா சம்பளம்? இந்த நிலையில், 'கருப்பு' திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், நடிகர் சூர்யா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, சூர்யாவின் அடுத்த திரைப்படத்திற்கான சம்பளம் ரூ.100 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. எனினும், இதுகுறித்து சூர்யா அல்லது தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/did-suriya-hike-his-salary-after-the-success-of-the-movie-karuppu




