சென்னை, தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 5ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2026-27ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் 6ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து சட்டசபை கூட்டத்தொடரில் தற்போது மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சட்டசபைக்கு நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் விடுமுறை ஆகும். 31-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. துறையின் அமைச்சர்கள் விக்னேஷ், ஜெகதீஷ்வரி, வினோத் ஆகியோர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டவுடன் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். அதன்பின்னர் அவர்களுடைய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலுரை வழங்குவார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/2-day-holiday-for-the-assembly




